Breaking News Live : ஆளுநரை பதவி நீக்கக்கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு..!
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதாக தமிழ்நாடு ஆளுநரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீது நாளை தீர்ப்பு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே விஜய் நடித்த வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவெரா திருமகன் மறைவுக்கு, தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அனைவரின் அன்புக்கும் உரியவராக இருந்தவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.
ஹைட்ரஜன் மூலம் பசுமை எரிபொருள் தயாரிக்க ரூ. 19,744 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா திடீர் மாரடைப்பால் இறந்துள்ளார்.
சென்னை புத்தக கண்காட்சிக்காக 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக பபாசி அறிவித்துள்ளது.
பாஜகவில் இருந்த மருத்துவர் சரவணன் அதிமுகவில் இணைந்துள்ளார்.
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கூடுதலாக 4 மணிநேரம் படகு சேவையை அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 136 உயர்ந்து பவுன் ஒன்றுக்கு 41 ஆயிரத்து, 664 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 10 இடங்கள் உள்ளிட்ட மாநிலத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Background
மத சுதந்திர சட்டம்
கலப்பு திருமணம் உள்ளிட்ட பல வகைகளில் மதமாற்றம் செய்யப்படுவதாக கூறி, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மத்திய பிரதேச அரசு மத சுதந்திரச் சட்டம் சட்டம் ஒன்றை இயற்றியது. தவறான சித்தரிப்பு, கவர்ச்சி, பலாத்கார அச்சுறுத்தல், கட்டாயப்படுத்துதல், திருமணம் அல்லது வேறு எந்த மோசடி வழிமுறைகளிலும், மதமாற்றங்களை செய்வதை இச்சட்டம் தடை செய்கிறது. மேலும், மாவட்ட ஆட்சியர் ஒப்புதலின்றி திருமணம் செய்து கொள்பவர்கள் மீது வழக்கு தொடரப்படும் வகையிலும் இச்சட்டம் இயற்றப்பட்டது.
உயர் நீதிமன்றம் தடை
இதையடுத்து, மத சுதந்திர சட்டத்தின் பிரிவு 10-ன் கீழ் தங்கள் சொந்த விருப்பப்படி திருமணம் செய்து கொள்பவர்கள் மீது வழக்கு தொடர கூடாது என்று மத்திய பிரதேச மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து மத்திய பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
மேல்முறையீட்டு மனு
இந்நிலையில், இந்த வழக்கானது, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மத்திய பிரதேச மத சுதந்தர சட்ட சரத்துக்களுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த விதித்த தடையை நீக்க கோரினார். சட்டவிரோத மது மாற்றங்களுக்கு திருமணம் பயன்படுத்தப்படுகிறது என்றும், இதை பார்த்து கொண்டு "நாங்கள் கண்ணை மூடிக் கொள்ள முடியாது" என்றும் மேத்தா கூறினார்.
தடை விதிக்க மறுப்பு:
ஆனால் உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க மறுத்துவிட்டது. இதற்கு, அனைத்து மதமாற்றங்களும் சட்டவிரோதமானவை என்று கூற முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்காமல் கலப்பு திருமணம் செய்து கொள்பவர்கள் மீது வழக்கு தொடர, தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய பிரதேச அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்கவும் ஒப்புக்கொண்டது.
பதிலளிக்க உத்தரவு:
மேலும், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மேலும் இச்சட்ட விதிகளை எதிர்த்து ஏழு மனுக்கள்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் கீழ், யாரையும் வழக்கு தொடர்வதை தடுக்கும் வகையில், மனுதாரர்களுக்கு இடைக்கால நிவாரணம் கோரி மனுவில் தெரிவித்துள்ளனர்.
மனுக்களுக்கு, பதில் மனு தாக்கல் செய்ய மாநில அரசுக்கு மூன்று வார கால அவகாசம் அளித்த நீதிமன்றம், மனுதாரர்கள் 21 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறும் கூறி வழக்கை ஒத்திவைத்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -