Breaking Live | கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
Breaking News in Tamil Live: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்..
காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை(20.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாவட்ட நிர்வாகம்
மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும் - நடிகர் கார்த்தி
வேளாண் சட்ட நலனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை
தொடர் முயற்சி செய்து வேளாண் சட்ட நலனை விளக்குவதில் வெற்றி பெற முடியவில்லை
வேளாண் சட்டங்களில் நலனை விளக்க முடியாதது எங்களுடைய தவறு என கருதுகிறேன்
வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்
- பிரதமர் மோடி
ஜனநாயக போராட்டங்களால் சாதிக்க முடியாததை, வரவிருக்கும் தேர்தல்களுக்கு பயந்து சாதிக்க முடிகிறது - பசிதம்பரம் கருத்து
டெல்லி எல்லையில் ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது - விவசாயிகள் சங்கம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற நடவடிக்கை - பிரதமர் மோடி
அடுத்த ஆண்டு உபி, பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பு கவனம் பெறுகிறது
3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படும் - பிரதமர் மோடி
விவசாயிகளின் நலனுக்காகவே 3 வேளாண் திட்டங்கள்கொண்டுவரப்பட்டுள்ளன - பிரதமர் மோடி
சரியான விதைகள், உரம், பயிர்க்காப்பீடு என விவசாயிகளுக்கு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன - பிரதமர்
நாட்டின் 80% பேர் சிறுவிவசாயிகளாக உள்ளனர் - பிரதமர் மோடி
விவசாயிகளை வேதனைகளை நேரடியாக அறிவேன் - பிரதமர் மோடி
2014ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறோம் - பிரதமர் மோடி
நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேசத்தில் ரூ 6250 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில், சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குரு நானக் தேவ், பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் மகோபா மற்றும் ஜான்சி மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். முன்னதாக, பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார்" என்று பதிவு செய்யப்பட்டுள்ளது
Background
Breaking News in Tamil Live:
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலைக்கொண்டிருந்தது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னை அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இதன்படி, வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று அதிகாலைகாலை முதல் கரையை கடக்கத் தொடங்கி காலை 7 மணியளவில் கரையை கடந்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -