Breaking Live : விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல்
Breaking News LIVE Updates: இன்றைய நாளின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்..
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி நளினி மனுதாக்கல் செய்துள்ளார். இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். பேரறிவாளன் வழக்கை சுட்டிக் காட்டி மனுதாக்கல் செய்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனு மீது விசாரணை. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஒபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சாரல் மழைக்கு வாய்ப்பு.
குடியரசுத் துணைத் தலைவர் பதிவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா , நிர்மளா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு.
நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதிவியேற்றுக் கொண்டார்.
குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதிவியேற்பு விழா துவக்கம்
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவதியாகவில்லை : எடப்பாடி பழனிசாமி தரப்பு
பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால்தான் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் : முதல்வர்
பொதுக்குழு அதிமுக விதிப்படிதான் கூட்டப்பட்ட்டது : உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு வாதம்
அதிமுக பொதுக்குழு எதிரான வழக்குகளின் விசாரணை 2வது நாளாக உயர்நீதிமன்றத்தில் தொடங்கி உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து 2ஆவது நாளாக 1.40 லட்சம் கன அடியாகத் தொடர்கிறது.
போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்து பிரச்சாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கை இன்று காலை 10.30 மணிக்கு இன்று மீண்டும் உயர் நீதிமன்றம் விசாரிக்கிறது.
முன்னதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கை 2ஆம் நாளாக நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிக்கிறார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கை இன்று காலை 10.30 மணிக்கு இன்று மீண்டும் உயர் நீதிமன்றம் விசாரிக்கிறது.
முன்னதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கை 2ஆம் நாளாக நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் ரஜோரி அருகே பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலால் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர்.
கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றார். இதையடுத்து நாட்டின் குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்கிறார்.
சீனாவில் லாங்யா ஹெனிபாவைரஸ் என்னும் புதிய வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 35 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி யு.யு.லலித் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை நீதிபதி லலித்தின் பதவிக்காலம் நவம்பர் 8ஆம் தேதி நிறைவடைவதால் 74 நாட்கள் மட்டுமே அவர் இப்பதவி வகிப்பார்.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ஜுன் மாதம் வரை ரூ. 9.19 கோடி மதிப்பு 152 டன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
"நான் ’சாப்ட்’ முதலமைச்சர் இல்லை; தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறுவேன்" என காவல் துறையினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
Background
செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் வென்ற இரு அணிகளுக்கு தலா 1 கோடி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொதுப்பிரிவில் வென்ற இந்திய பி அணி, மகளிர் பிரிவில் வென்ற இந்திய அணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது.
இந்தியாவில் அதிலும் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாடில் பொதுப் பிரிவில் 'இந்திய பி அணியும்' பெண்கள் பிரிவில் 'இந்திய ஏ அணியும்' என இரண்டு அணிகள் பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
44-வது பன்னாட்டு சதுரங்க விளையாட்டு போட்டிகளில் பொதுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற 'இந்திய பி அணிக்கும்' பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற 'இந்திய ஏ அணி (பெண்கள்)' ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கடந்த 28ஆம் தேதி வண்ணமயமான தொடக்க விழாவுடன் தொடங்கின. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவில் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். வெளிநாட்டவரையும் கவரும் வகையில் மிக பிரம்மாண்ட ஏற்பாடுகள் இவ்விழாவில் செய்யப்பட்டிருந்தன. தொடக்க விழாவில், மத்திய மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருடன் இயக்குனர் விக்னேஷ் சிவன், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வைரமுத்து, கார்த்தி, உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களும் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து 13 நாள்களாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்ற நேற்றுடன் இவ்விழா நிறைவடைந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -