கொரோனா முதல் அலையின் போது, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொழில் நிமித்தமாக தங்களது ஊர்களை விட்டு புலம்பெயர் தொழிலாளர்களாக வந்த ஏராளாமான தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு கால் நடையாகவும், மிதி வண்டியிலும் சென்றனர்.
அப்போது 16 வயது சிறுமியாக இருந்த ஜோதி குமாரி, காயமுற்ற தனது தந்தையான மோகன் பாஸ்வானை டெல்லியில் இருந்து பீகார் வரை சுமார் 1200 கி.மீ சைக்கிளிலே அழைத்து சென்றார். இதன் மூலம் அவர் தேசிய அளவில் கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து அவரது தந்தை மாராடைப்பால் உயிரிழந்தார்.
பூமி நல்லாயிருக்கணும்னா கடற்பசு நல்லா இருக்கணும்.. தேவையை உணர்ந்த தமிழகம் - குவியும் பாராட்டு!
பிரதமர் மோடி ஜோதி குமாரியுடன் உரையாடினார். இந்த நிலையில் தற்போது ஜோதி குமாரிக்கு கொரோனா சாம்பியன் என்ற பெயரில் மத்திய அரசின் பால புரஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
SmartPhone Battery | உங்க ஸ்மார்ட்ஃபோன் பேட்டரியில் பிரச்சனையா? அப்போ இதை உடனே பண்ணுங்க!
புதுமையான கண்டுபிடிப்புகள், கல்வித்திறன், விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், பொதுசேவை, மற்றும் வீர தீர மிக்க துறைகளில் தலை சிறந்த சாதனைகளை படைத்துள்ள திறமையுள்ள குழந்தைகளுக்கு ‘பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார்’ விருதுகளை மத்திய அரசு வழங்கும். இந்த முறை பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருதுக்கு 29 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விருது பெறும் ஒவ்வொருவருக்கும் 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் சான்றிதழும் பதக்கமும் வழங்கப்படும். மேலும் அவர்கள் வரப்போகும் குடியரசு தின விழா அணிவகுப்பிலும் கலந்துகொள்வர்.
திருச்சியில் 24 குரங்குகள், 12 நாய்கள் விஷம் வைத்து கொலை
விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். சான்றிதழ் ‘பிளாக் செயின் தொழில்நுட்பத்தின்’ மூலம் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.
மேலும் படிக்க : Delhi | நிஜ துப்பாக்கியில் விளையாட்டு.. நெஞ்சில் பாய்ந்த குண்டு.. சுருண்டு விழுந்த 11 வயது சிறுவன்!
மேலும் படிக்க : Hyderabad : நெற்றியில் குங்கும பொட்டு.. கவிழ்ந்து இருந்த சாமி போட்டோஸ்.. மர்ம முறையில் இறந்துகிடந்த குடும்பம்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்