வீட்டில் இருந்த நிஜ துப்பாக்கியை வைத்து விளையாடியபோது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 11 வயது சிறுவன் உயிரிழந்தான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கவனமாக கையாளக் கூடிய ஒன்று. குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளை பெற்றோர்களே கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டும். அஜாக்கிரதையும், சூழ்நிலையும் சில நேரம் பெற்றோர்களுக்கு மறக்க முடியாத வலியை கொடுத்துவிடுகிறது. அப்படியான விபத்துகள் உலகம் முழுவதும் நடந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் ஒரு சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வீட்டில் இருந்த நிஜ துப்பாக்கியை வைத்து விளையாடியபோது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். டெல்லியின் நூ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென துப்பாக்கிச்சுடும் சத்தம் கேட்டுள்ளது. 


கோயிலில் உள்ள குளிக்கும் அறையில் 3 ரகசிய கேமிராக்கள் இருந்ததால் பெண்கள் அதிர்ச்சி




அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தபோது அவர்களின் மூத்த மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். பெற்றோர் வீட்டில் இல்லாதபோது விபத்து நடந்ததால் உடனடியாக அக்கம் பக்கத்தினரே மருத்துவமனைக்கு சிறுவனை தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால்  ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 


முதற்கட்ட விசாரணையின்படி சம்பவம் நடந்த போது பெற்றோர் வீட்டில் இல்லை. வீட்டில் இருந்த நாட்டுத்துப்பாக்கியை வைத்து 11 வயது சிறுவனும், அவனது தங்கையுமான 9 வயது சிறுமியுன் விளையாடியுள்ளன. அப்போது எதிர்பாராத விதமாக கைத்துப்பாக்கி வெடித்து சிறுவன் நெஞ்சுப்பகுதியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவன் அருகில் உள்ள கட்டிலில் சாய்ந்துவிட்டான். சத்தம் கேட்டு ஓடு வந்த பக்கத்து வீட்டினர் ரத்த வெள்ளத்தில் சிறுவன் கிடப்பதையும், அருகில் துப்பாக்கி இருப்பதையும் பார்த்துள்ளனர். இது தொடர்பாக அருகில் நின்ற தங்கையிடம் விசாரணை நடத்தியபோது தாங்கள் துப்பாக்கியை வைத்து விளையாடிக்  கொண்டிருந்தோம் என சிறுமி கூறியுள்ளார்.


விபத்து வழக்காக இதனை தற்போது பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை வளர்பில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டுமென போலீசார் அறிவுரையும் வழங்கியுள்ளனர்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண