உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது ஆக்ரா. இந்த மாநிலத்தில் உள்ள பதேபுர் சிக்ரி காவல்நிலைய எல்லைக்குட்பட்டது துலாரா கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் ஹரேந்திரா. 26 வயதான இவரது மனைவி சோனியா. 24 வயதே ஆன சோனியாவிற்கும், ஹரேந்திராவிற்கும் கடந்த 2018ம் ஆண்டுதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், சோனியா திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.




திருமணமாகி 2 வருடங்களே ஆன இளம்பெண் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்ததால் அவரது குடும்பத்தினர் மிகவும் கடுமையாக அதிர்ச்சியடைந்துள்ளனர். சோனியாவிற்கு அவரது கணவன் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காவல்துறையின் உதவி எண்ணை தொடர்பு கொண்ட சோனியாவின் சகோதரர் தனது தங்கையின் கணவர் குடும்பத்தினர் தனது தங்கைக்கு வரதட்சணை கொடுமை அளித்ததாகவும், தனது தங்கை சோனியாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் புகார் அளித்தார்.


இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் இறுதிச்சடங்கில் வைக்கப்பட்டிருந்த சோனியாவின் உடலை கைப்பற்றினர். பின்னர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சோனியாவின் சகோதரர் அளித்த புகாரின்பேரில் சோனியாவின் கணவர் ஹரேந்த்ரா, சோனியாவின் மாமனார் மற்றும் மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.




குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இன்னும் வரதட்சணை கொடுமை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இதனால், பல இளம்பெண்கள் தற்கொலை செய்து கொள்வதும், வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாக நிகழ்வதற்கு சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க : Delhi | நிஜ துப்பாக்கியில் விளையாட்டு.. நெஞ்சில் பாய்ந்த குண்டு.. சுருண்டு விழுந்த 11 வயது சிறுவன்!


மேலும் படிக்க : Hyderabad : நெற்றியில் குங்கும பொட்டு.. கவிழ்ந்து இருந்த சாமி போட்டோஸ்.. மர்ம முறையில் இறந்துகிடந்த குடும்பம்..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண