இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்பும் பீகார் அரசு ஊழியர்கள் இப்போது அந்தந்த துறைகளுக்கு தகவல் தெரிவித்த, தேவையான அனுமதியைப் பெற்ற பின்னரே செய்து கொள்ள முடியும்.
இதை படிக்க: ABP Exclusive: அந்த ரத்தக்கறை உண்மைதான்.. ஆனால்..- ஸ்ரீமதி இறப்பு விசாரணை குறித்து பேசிய எஸ்.பி
அனைத்து அரசு அலுவலர்களும் தங்களது திருமண உறவு குறித்து தகவல் தெரிவித்து, தேவையான அனுமதி பெற்ற பின்னரே இரண்டாவது திருமணத்திற்கு தகுதி பெறும் வகையில் பீகார் மாநில அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, இரண்டாவது திருமணம் செய்யத் திட்டமிடும் எந்தப் அரசு பணியாளரும் தனது முதல் மனைவியிடமிருந்து சட்டப்பூர்வப் விவாகரத்தை பெற்று, சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பணியாளரின் முதல் மனைவி அல்லது கணவன் எதிர்த்தால், இரண்டாவது மனைவி அல்லது கணவனுக்கு அரசு சலுகைகள் மறுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை படிக்க: Susmita sen: இம்ரான் கான் முதல் லலித் மோடி வரை.. சுஸ்மிதா சென்-ஐ சுற்றிய டேட்டிங் பரபரப்புகள்!
இதற்கிடையில், அரசு ஊழியர் ஒருவர் சம்பந்தப்பட்ட துறையின் அனுமதியின்றி இரண்டாவது திருமணம் செய்து பணியின் போது இறந்தால், அவரது இரண்டாவது மனைவி/கணவன் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு கருணை அடிப்படையில் வேலை கிடைக்காது. முதல் மனைவியின் குழந்தைகளுக்கு மாநில அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அனைத்துப் பிரிவு ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துணைப் பிரிவு மாஜிஸ்திரேட்டுகள், காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி), டிஜிபி ஊர்க்காவல்படை, டிஜிபி சிறைத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அலுவலர்களும் அந்தந்த அதிகார வரம்புகளில் இதை அமல்படுத்துமாறு பொது நிர்வாகம் அறிவித்துள்ளது.
பீகார் அரசின் இந்த முடிவு, எந்த விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உண்மையான காரணங்களை காட்டி விவாகரத்து செய்ய குறிப்பிட்ட அரசு அலுவலர் முயற்சிக்கும் போது, அதை அவரது இணையர் எதிர்த்தால் இந்த உத்தரவு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்