மூளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்பு தானம், புனேவில் உள்ள கமாண்ட் ஹாஸ்பிட்டல் சதர்ன் கமாண்டில் பணியில் இருந்த இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட ஐந்து பேரின் உயிரைக் காப்பாற்றியது.


 






இதுகுறித்து ராணுவத்தின் மக்கள் தொடர்புதுறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "ஒரு இளம் பெண் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் ராணுவ மருத்துவமனைக்கு (சதர்ன் கமாண்ட்) கொண்டு வரப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கும் போது, அவர் உடல் நலத்துடன் இருப்பதற்கான அறிகுறிகள் அவரிடம் தென்படவில்லை. 


மூளைச் சாவுக்கு பிறகுதான் உடல் உறுப்பு தானம் குறித்து குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. மருத்துவமனையின் மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளருடன் கலந்துரையாடிய பின்னர், அந்த பெண்ணின் உடல் உறுப்புகள் மிகவும் தேவைப்படும் நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட வேண்டும் என்று குடும்பத்தினர் விரும்பினர்.


போதுமான அனுமதி கிடைத்த பிறகு, ராணுவ மருத்துவமனையில் உடல் உறுப்புகள் குழு உடனடியாக நடவடிக்கையில் இறக்கப்பட்டது. மண்டல மாற்று ஒருங்கிணைப்பு மையம், ராணுவ உறுப்பு மீட்பு மற்றும் மாற்று ஆணையத்திற்கும் தகவல் உடனடியாக அனுப்பப்பட்டது.


ஜூலை 14 இரவு மற்றும் ஜூலை 15 அதிகாலை வரை, சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் இரண்டு வீரர்களுக்கு சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்டன. மூளை சாவு அடைந்த பெண்ணிடமிருந்து எடுக்கப்பட்ட கண்கள் ஆயுதப் படை மருத்துவக் கல்லூரி வளாகத்தின் கண் வங்கியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. புனேவில் உள்ள ரூபி ஹால் கிளினிக்கில் ஒரு நோயாளிக்கு கல்லீரல் கொடுக்கப்பட்டது.


மரணத்திற்குப் பிறகான உறுப்பு தானமும் நன்கு ஒருங்கிணைந்த முயற்சியும் கடுமையாக நோய்வாய்ப்பட்ட ஐந்து நோயாளிகளுக்கு உயிர் மற்றும் கண்பார்வை அளித்துள்ளது. 


இத்தகைய சூழ்நிலைகளில் தேவைப்படும் நோயாளிகளுக்கு உறுப்பு தானத்தின் விலைமதிப்பற்ற பங்கு பற்றிய விழிப்புணர்வை இது பரப்புகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண