Susmita sen: இம்ரான் கான் முதல் லலித் மோடி வரை.. சுஸ்மிதா சென்-ஐ சுற்றிய டேட்டிங் பரபரப்புகள்!

நடிகை சுஸ்மிதா சென்னுடன் டேட்டிங்கில் இருப்பதாக லலித் மோடி கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Continues below advertisement

நடிகை சுஸ்மிதா சென்னுடன் டேட்டிங்கில் இருப்பதாக லலித் மோடி கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Continues below advertisement


சுஸ்மிதா சென் - லலித் மோடி:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் உருவாக காரணமாக இருந்தவர்களில் ஒருவரான லலித் மோடி, அவரும் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றவரும், நடிகையுமான சுஸ்மிதா சென்னுடன் டேட்டிங்கில் இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்ததோடு, இருவரது புகைப்படத்தையும் பதிவெற்றியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் வரலாற்றில் சுஸ்மிதா சென் யார் யாருடனெல்லாம் டேட்டிங் செய்திருக்கிறார் என்று பார்க்கலாம்.


சுஸ்மிதா சென் - ரோமன் ஷால்:

தற்போது லலித் மோடியுடன் சுஷ்மிதா சென் டேட்டிங்கில் இருக்கிறார். அதற்கு முன்பு டேட்டிங்கில் இருந்தது ரோமன் ஷால் என்ற மாடலுடன் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக டேட்டிங்கில் இருந்த இருவரும் கடந்த ஆண்டு தான் பிரிந்தனர். ஆனாலும், நல்ல நண்பர்களாக தங்கள் உறவைத் தொடர்வதாகத் தெரிவித்துள்ளனர்.


சுஸ்மிதா சென் - ரந்தீப் ஹூடா:

அதற்கு முன்னதாக மன்சூன் வெட்டிங், டர்னா ஸரூரி ஹை உள்ளிட்ட திடைப்பரங்களில் நடித்த ரந்தீப் ஹூடாவுடன் டேட்டிங் செய்தார். சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த டேட்டிங் பின்னர் முடிவுக்கு வந்தது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ரந்தீப் ஹூடா, இந்த ப்ரேக்ப் தான் எனக்கு நடந்த மிகச் சிறந்த நல்லது. நான் என் வாழ்வில் அதிகபட்ச நேரத்தை இதற்குக் கொடுத்துவிட்டேன் என்று கூறியிருந்தார்.


சுஸ்மிதா சென் - விக்ரம் பட்:

‘தஸ்டக்’ திரைப்பட ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக இயக்குநர் விக்ரம் பட் உடன் டேட்டிங்கில் இருந்தார் சுஷ்மிதா சென். 1996ல் வெளியான இப்படத்தில் சுஷ்மிதா சென் நடித்திருந்தார். இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருந்தார் விக்ரம் பட். படத்தில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாததால் இப்படம் சரியாக போகவில்லை. ஆனால், இருவருக்கும் இடையே ரியல் லைஃப் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால் டேட்டிங்கில் இருந்தனர். அந்த சமயத்தில் சிறந்த ஜோடியாக இருவரும் பார்க்கப்பட்டனர். இருவரும் டேட்டிங்கில் இருந்த போது விக்ரம் பட்டிற்கு திருமணம் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.




சுஸ்மிதா சென் - வாசிம் அக்ரம்:

2008களில் ஒளிபரப்பான ஏக் கில்லாடி ஏக் ஹஸ்ஸீனா என்ற ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றபோது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் உடன் காதல் ஏற்பட்டதாகவும், இருவரும் காதலித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், லலித் மோடியுடன் சுஷ்மிதா சென் நெருங்கிப் பழகியதால் இந்த காதல் காணாமல் போனது என்று கூறப்படுகிறது.


சுஸ்மிதா சென் - முடஸ்ஸார் அஸிஸ்

இயக்குநர் முடஸ்ஸார் அஸிஸ் உடனும் சுஸ்மிதா சென் தொடர்பில் இருந்தார். துல்ஹா மில்கயா திரைப்பட ஷூட்டிங்கின்போது இருவருக்கும் நல்ல உறவு உருவாக சிறிதுகாலம் இருவரும் டேட்டிங் செய்திருக்கின்றனர். தற்போது அஸிஸ் ஹுமா குரேஷியுடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சுஸ்மிதா சென் - சஞ்சய் நரங்:


பலருடன் டேட்டிங்கில் இருந்தாலும் ஒருவரை காதலிப்பதாக சுஸ்மிதா கூறினார் என்றால் அது சஞ்சய் நரங் தான். சஞ்சய் நரங்குடன் காதலில் இருப்பதாகக் கூறிய சுஷ்மிதா அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், அந்த திருமணம் கடைசிவரை நடைபெறாமலேயே போய்விட்டது.


சுஸ்மிதா சென் - இம்தியாஸ் கட்ரி:

தொழிலதிபர் இம்தியாஸ் கட்ரியுடன் ஒரு ஃபேஷன்ஷோவில் ராம்ப் வாக் போட்ட சமயத்தில் அவர் மீது காதலில் விழுந்திருக்கிறார். இந்த விஷயம் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இதைப் பற்றி அவர்க இருவரும் வாயைத் திறக்கவே இல்லை.


சுஸ்மிதா சென் - சபீர் பாட்டியா:

ஹாட்மெயிலை உருவாக்கியவர்களில் ஒருவரான சபீர் பாட்டியாவுடன் சிறிது காலம் உறவில் இருந்தார் சுஸ்மிதா. அப்போது சுஸ்மிதாவுக்கு 10.5 கேரட் வைரத்தை அன்பளிப்பாக கொடுத்ததாக தகவல்கள் வெளியானது.


சுஸ்மிதா சென் - ரித்திக் பாஷ்

2015ம் ஆண்டில் ஓரியான் எண்டர்டெய்ன்மெட்டைச் சேர்ந்த ரித்திக் பாஷின் உடன் சுமார் 4 ஆண்டு காலம் உறவில் இருந்தார் சுஷ்மிதா. ஆனால் பின்னர் இருவரும் என்ன காரணத்தாலோ பிரிந்துவிட்டனர்.


சுஸ்மிதா சென் - பண்ட்டி:

இவர்கள் மட்டுமல்லாமல் தனது மேனேஜர் பண்ட்டியுடனும் டேட்டிங் செய்திருக்கிறார் சுஸ்மிதா. இருவரது ரொமான்ஸ் மொமண்ட்டுகளும் வெளியுலகிற்குத் தெரியவர பின்னர் ஒன்றாகவே பல இடங்களுக்குச் சுற்றியிருக்கின்றனர்.



இப்படி தொடர்ந்த சுஸ்மிதாவின் டேட்டிங் பயணம் தற்போது லலித் மோடியுடன் டேட்டிங்கில் இருக்கிறார் சுஸ்மிதா என்ற தகவலுடன் தொடர்கிறது..

Continues below advertisement