வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சமீபத்தில் உருவானது. இதனால் தமிழ்நாடு, ஆந்திராவில் கடுமையான மழை பெய்தது. தமிழ்நாட்டிலிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து ஆந்திராவில் நிலைகொண்டதால் அங்கு தொடர்ந்து மழை கொட்டியது.


திருப்பதி, சித்தூர், அனந்தபூர், நெல்லூர், கடப்பா ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருப்பதி கோயிலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கோயிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.




மேலும், 17 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மழையின் காரணமாக ஏற்பட்ட மண் சரிவால் ஏராளமானோர் காணவில்லை எனவும் கூறப்படுகிறது. மனிதர்கள் மட்டுமின்றி  கால்நடைகளும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி அடித்து செல்லப்பட்டன.






வெள்ளத்தின் நடுவே ஜேசிபி இயந்திரத்தில் மாட்டிக்கொண்டவர்களை ஹெலிகாப்டரில் வந்து மீட்பு படையினர் மீட்ட வீடியோவும், ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ள வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.


இந்நிலையில், வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ஆந்திர முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தெலுங்கின் முன்னணி நடிகரான பிரபாஸ் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.




இவருக்கு முன்னதாக சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு, ராம்சரண் ஆகியோரும் நிதியுதவி அளித்திருந்தனர். இவர்கள் அனைவரும் தலா 25 லட்சம் ரூபாய் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Rahul Gandhi | நாட்டில் யாரும் பாதுகாப்பாக இல்லை, உள்துறை அமைச்சகம் என்னதான் செய்கிறது? - ராகுல் காந்தி


Tirupati Car Accident : திருப்பதியில் சாலை விபத்தில் பற்றி எரிந்த கார் : 5 பேர் தீயில் கருகிய பரிதாபம்..


Kangana Ranaut Politics| பாஜகவுக்காக பிரச்சாரம் பண்ணுவீங்களா? கங்கனா ரனாவத் கொடுத்த பதில் என்ன தெரியுமா?