டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சில எம்.பி.க்கள் தொடர்ந்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அவைக்கு வராமல் உள்ளனர். ஆளுங்கட்சியான பாஜகவின் உறுப்பினர்கள் சிலரும் அவை நடவடிக்கையில் பங்கேற்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.




இதன்காரணமாக, பிரதமர் மோடி பாஜக எம்.எல்.ஏ-க்கள் அவை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி பா.ஜ.க.வின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களிடம் நாடாளுமன்றத்தின் இரு அவையின் பா.ஜ.க. எம்.பி.க்களிடம் தொடர்ந்து அவை நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், குழந்தைக்கு சொல்வது போன்று மீண்டும், மீண்டும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. நீங்கள் இதை மாற்றிக்கொள்ளாவிட்டால், நீங்கள் மாற்றப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளார்.


பிரதமர் மோடியின் எச்சரிக்கையால் அவைக்கு முறையாக வராத பாஜக எம்.பி.க்கள் பீதியடைந்துள்ளனர். நடப்பாண்டில் நடைபெற்ற கூட்டத்தொடரிலே தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடர்தான் மிகவும் முக்கியமான கூட்டத்தொடர் ஆகும். இந்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்புதான் பிரதமர் மோடி புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தார். நடப்பு கூட்டத்தொடர் தொடங்கியவுடன் வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது.




மேலும், நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகவும், கிரிப்டோகரன்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் எம்.பி.க்களே தொடர்ந்து அவை நடவடிக்கைகளை புறக்கணித்து வருவது பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா உள்ளிட்டோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


ஏற்கனவே, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் அனைத்து அவை நடவடிக்கைகளிலும் பங்கேற்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தியிருந்தது. ஆனாலும், அவர்கள் தொடர்ந்து அவை நடவடிக்கைகளில் முறையாக பங்கேற்காமல் தவிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிற கட்சியின் தலைமையும் அந்தந்த கட்சி எம்.பி.க்களுக்கு அவை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : Super Saravana Stores: ரூ.1000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: சரவணா ஸ்டோர்ஸ் ரெய்டில் அம்பலம்!


மேலும் படிக்க : Parliament Winter Session: நீதிபதிகள் சம்பள சட்டத் திருத்தம்; மேலும் 2 தடுப்பூசிகள்: நாடாளுமன்றத்தில் என்ன நடக்கும்?


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண