புதுவை காவலர் பணியிட தேர்வுக்கு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுவதாக போலீஸ் டி.ஐ.ஜி. தெரிவித்துள்ளார். புதுச்சேரி டி.ஐ.ஜி. மிலிந்த் தும்ப்ரே, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா ஆகியோர் காவல் துறை தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- புதுவை காவல் துறையில் 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னிஷியன்கள், 20 டெக் ஹேண்டலர்ஸ் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த வகையில் மொத்தம் 17,225 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 14,766 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. நிராகரிக்கப்பட்ட 2,459 விண்ணப்பங்களின் விவரங்கள் https://police.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்தால் விபத்து - ஆட்டோ டிரைவர் இறந்ததால் பேருந்துக்கு தீ வைப்பு


தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 4.11.2020 உடல் தகுதித் தேர்வு, உடல் திறன் தேர்வுக்கான அனுமதி சீட்டு ஆன்லைனில் அனுப்பப்பட்டது. கொரோனா, நிர்வாக ரீதியாக தேர்வுகள் 31.10.2020 அன்று மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு ரேடியோ பிரிகொயின்சி ஐடென்டிபிகேஷன் கருவி, சிப் டைமிங் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிற ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் உடல் தகுதி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.


’’குற்றவாளிகளை தேட துப்பாக்கி எடுத்துட்டு போங்க’’- தமிழகத்தை பின்பற்றும் புதுச்சேரி போலீஸ்




சமாதானம் செய்ய வந்தவர் மீது தாக்குதல்... கடுப்பாகி நாட்டு குண்டு வீசினார்!


இதில் நிராகரிக்கப்பட்ட 2,459 விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் விதமாக அவர்களது மனுவுடன் உரிய சான்றிதழ்களை இணைத்து கோரிமேட்டில் உள்ள காவலர் ஆள் சேர்ப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 16-ந் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சமர்ப்பிக்கலாம்.


விண்ணப்பங்கள் காவலர் குறை தீர்ப்பு குழுவினால் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும். இந்த கால வரம்பிற்கு மேல் எந்தவித குறை தீர்ப்பு மனுவும் பெறப்படமாட்டாது. இட ஒதுக்கீடு வயது வரம்பு சலுகை உள்ளிட்ட அனைத்தும் அறிவிப்பாணை வெளியிட்ட நாளைக் கொண்டு கணக்கிடப்படும். மேலும் உதவிக்கு 0413-2277900 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். தேர்வுகளுக்கான இடம், நேரமும் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண