என்னம்மா இப்படி பண்ணிட்டியேமா? ஒரே பைக்கால் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.. வைரல் வீடியோ
Viral Video : கேரளாவில் தவறான பாதையில் வந்த பெண்ணால் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்னாக வந்து மோதிய பரபரப்பு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவில் தவறான பாதையில் வந்த பெண்ணால் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்னாக வந்து மோதிய பரபரப்பு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சாலையில் நாம் வாகனம் ஓட்டும் போது நாம் ஒழுங்காக சென்றாலும் எதிரில் வருபவர் ஒழுங்காக வராமல் போனால் நாமும் அதில் சிக்கி பாதிக்கப்படுகிறோம். அப்படி ஒரு சம்பவம் தான் கேரள மாநிலம் எர்ணாக்குளத்தில் அரங்கேறியுள்ளது.
இதையும் படிங்க: மாஸ்டர் படத்தால் 90 கோடி நஷ்டமா...தயாரிப்பாளர் பிரிட்டோவின் வைரல் வீடியோ
குறுக்கே வந்த பெண்:
சாலையில் இரு சக்கர வாகனத்தில் இருவர் சென்று கொண்டிருந்தனர், அப்போது சாலையில் குறுக்கே பெண் ஒருவர் தனது ஸ்கூட்டியில் கடக்க முயன்றார். இதனை பார்த்து சுதாரித்துக்கொண்ட அந்த பைக் ஓட்டுநர் வண்டியை நிப்பாட்டினார். அதன் பிறகே ட்விஸ்ட் ஒன்று ஏற்ப்பட்டது.
பைக்கை நிப்பாட்டியவர்களுடன் அந்த பெண்மணி வாக்குவாதம் செய்தார், ஆனால் சில விநாடிகளிலேயே பின்னால் வந்த பேருந்து மோதி நின்றது. அதன் பின்னர் தான் அங்கு சங்கிலி தொடர் விபத்தானது ஏற்ப்பட்டது.
பின்னால் 4 முதல் 5 பேருந்துகள் ஒன்றோடு மோதி நின்று இருந்தது. இந்த விபத்தால் பேருந்தில் வந்த பயணிகள் நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்ப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Parashakthi : கதையில ட்விஸ்ட்... விஜய் ஆண்டனியால் சிவகார்த்திகேயன் பட டைட்டிலில் மாற்றமா ?
மற்றொரு விபத்து:
இதே போல கொச்சியில் ஒரு ஃபெராரி ஸ்போர்ட்ஸ் சொகுசு கார் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், நொறுங்கிய ஃபெராரி காரைக் கண்டதும் பெரும் கூட்டம் அலைமோதியது, இதனால் களமசேரி மருத்துவக் கல்லூரி அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, விபத்தில் சிக்கிய ஃபெராரி 488 ஜிடிபி மாடல் காரின் விலை ரூ.5 கோடி.