ஜூன் 12 அன்று நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வாஸ் குமார் ரமேஷுக்கு, அந்த மிகப்பெரிய துயரத்திலிருந்து மீள்வது ஒரு போராட்டமாகவே இருந்து வருகிறது. மேலும் உயிர் பிழைத்த துக்கமே அவரை உடைத்துவிட்டது என அவரின் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.
அகமதாபாத் விமான விபத்து
கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் சிக்கியது. இதில் பயணம் 241 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிரிழந்தார். லண்டனில் வசிக்கும் ரமேஷ் மற்றும் அவரது சகோதரர் அஜய் இருவரும் அந்த விமானத்தில் இருந்தனர். இந்த கோர விபத்தில் ரமேஷ் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். விமானம் விபத்துக்குள்ளாகி மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில், அவசர வெளியேறும் இடம் அருகிலிருந்ததால் ரமேஷ் தான் அமர்ந்திருந்த 11A இருக்கையிலிருந்து தானாக வெளியேற முடிந்தது. வெளியே வந்ததும், தனது சகோதரை ரமேஷ் தேடி திரிந்தாராம். ஆனால் அவர் உயிருடன் இல்லை என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.