எஸ் கே 25
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருக்கிறது. டான் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரவி மோகன் , அதர்வா , ஶ்ரீலீலா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். பீரியட் ஆக்ஷன் டிராமாவாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி படத்தின் டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கடந்த சில நாட்கள் முன்பாக தகவல் வெளியானது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி 25
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனியின் 25 ஆவது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பராசக்தி மற்றும் சக்தி திருமகன் என்று பராசக்தி என்று இரண்டு டைட்டிலகள் வைக்கப்பட்டுள்ளன. அருவி , வாழ் படத்தை இயக்கிய அருண் பிரபு இந்த படத்தை இயக்குகிறார். சிவகார்த்திகேயன் படத்திற்கு பராசக்தி என்று டைட்டில் வைக்கப்பட்டதாக நம்பிவந்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
திட்டமிட்டே படக்குழு தவறான தகவல்களை வெளியிட்டு டைவர்ட் செய்ததா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அப்படி என்றால் சிவகார்த்திகேயன் படத்திற்கு என்ன டைட்டில் என்பது குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளது. விஜய் ஆண்டனி படத்திற்கு தெலுங்கில் மட்டுமே பராசக்தி என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி டைட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் சிலர் தெரிவித்து வருகிறார்கள்