பிரசித்தி பெற்ற அனந்தமங்கலம் ஶ்ரீ இராஜகோபால சாமி கோயிலில் நடைபெற்ற தை அமாவாசை சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வழிபாட்டு சென்றனர்.
ராமர் பக்தரான அனுமன்
ராம பக்தரான அனுமனை வழிபடுபவர்களுக்கு அவர் என்றும் துணையாக இருந்து காப்பார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அனுமனின் அவதார தினம் மற்றும் அமாவாசை தினத்தன்று அவரை வழிபடுவது மிக மிக சிறப்பாக கருதப்படுகிறது. இதில் தை மாதத்தில் வரக் கூடிய அமாவாசை மிக சிறப்பான நாட்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இந்நாளில் ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு அனுமனின் அருளுடன், பெருமாளின் அருளும் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
பூம்புகார் மற்றும் காவிரி துலா கட்டத்தில் அமாவாசை வழிபாட்டுக்காக திரண்ட பொதுமக்கள்.

அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற செங்கமலத் தாயார் சமேத ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ளது. இக்கோயில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமர்சையாக நடைபெற்றது. இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும், அந்தக் கரங்களில் எல்லாம் சங்கு, சக்கரம், வில், அம்பு, சூலம் போன்ற ஆயுதங்களை ஏந்தி, முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சித் தருகிறார். இதுபோன்ற ஆஞ்சநேயர் திருமேனி உலகில் இங்கு மட்டுமே உள்ளது.
கோயில் தல வரலாறு
மேலும் தனிச்சிறப்பாக அனந்தமங்கலம் ராமாயணத்துடன் நேரடி தொடர்பு கொண்டது. ஆஞ்சநேயர் இலங்கையில் உள்ள அரக்கர்களை சம்ஹாரம் செய்து. திரும்பி வரும் வழியில் கடலோரம் இயற்கைச் சூழ்ந்த இடத்தில் இறங்கி ஆனந்தமாய் தங்கியிருந்த இடம்தான் இந்தத் தலம் என்றும், அதனாலேயே இது ஆனந்தமங்கலம் என்று அழைக்கப்பட்டு தற்போது மறுவி அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது என்பது தல வரலாறு.
மாஸ்டர் படத்தால் 90 கோடி நஷ்டமா...தயாரிப்பாளர் பிரிட்டோவின் வைரல் வீடியோ
தை அமாவாசை வழிபாடு
எனவே இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டாலே சிவன், திருமால், பிரம்மா, ஸ்ரீராமர், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் இன்று தை அமாவாசை வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. தை மாதம் அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேய சுவாமியை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து, சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேய சுவாமிக்கு துளசி, வெற்றிலை, எலுமிச்சை மற்றும் வடைகளால் மாலைகள் அணிவித்து பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.
Maha Kumbh Stampede : வதந்தியை நம்பாதீங்க.. இங்க மட்டும் போய் குளிங்க.. யோகி விடுத்த வேண்டுகோள்