பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது முசாபர்பூர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் ஏராளமான ஆலைகள் அமைந்துள்ளது. அந்த பகுதியில் நூடுல்ஸ் தயாரிக்கும் ஆலை ஒன்றும் செயல்பட்டு வந்தது. அங்கு அமைந்துள்ள ஆலை ஒன்றில் காலை 10 மணியளவில் திடீரென்று பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்தபோது அந்த நூடுல்ஸ் ஆலையில் உள்ள கொதிகலன் ஒன்று வெப்பம் தாங்காமல் வெடித்துச் சிதறியுள்ளது.




இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் ஆலையில் ஷிப்ட் அடிப்படையில் இன்றும் பணியாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். திடீரென கொதிகலன் வெடித்து சிதறியதால் ஆலையில் பணியாற்றியவர்களில் 6 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும், ஆலையில் பணியாற்றிய 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.


பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட இந்த விபத்தினால் அந்த நூடுல்ஸ் ஆலை முழுவதும் இடிந்து விழுந்து சேதமடைந்தது. தகவலறிந்த போலீசாரும், தீயணைப்பு மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.


அவர்கள் உடனடியாக இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுவரை விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் யாருக்கும் தெரியவில்லை. இந்த விபத்து தொடர்பாக பெல்லா மற்றும் மிதன்புரா காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.




இந்த விபத்து தொடர்பாக முதன்மை கொதிகலன் ஆய்வாளர் கே.பி.சிங் கூறும்போது, கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை. பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொதிகலன் வெடித்து சிதறியதால் அருகில் இருந்த ஒரு கிலோமீட்டர் மீட்டர் தொலைவிற்கு பயங்கர சத்தம் கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க :Tsunami 17 Years | மக்களை காவு வாங்கிய கடல்... சுனாமி ஏற்பட்டு 17 வருடங்கள்... நினைவுகூர வேண்டியது என்ன?




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண