கொரோனாவின் புதிய உருவமான ஒமிக்ரானை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று  ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.


இந்த ஆண்டுக்கான கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். நாடு முழுவதும் பரவிவரும் ஒமிக்ரான் மாறுபாடு மற்றும் உலகம் முழுவதும் பரவி வருவதை பற்றி பேசிய பிரதமர் மோடி, இன்னும் சில நாட்களில் புத்தாண்டில் நாம் நுழைவதால் பரவுவதை தடுக்க விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த விவகாரத்தை ஆய்வு செய்து வருவதாக மக்களுக்கு உறுதியளித்தார். மேலும், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர், கொரோனா  நெறிமுறைகளைப் பின்பற்றவும், பொது இடங்களில் முகக்கவசம் அணியவும் வலியுறுத்தினார்.






மேலும், “கொரோனா ஒமிக்ரானின் புதிய மாறுபாடு நம் கதவுகளைத் தட்டியுள்ளது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். இந்த உலகளாவிய தொற்றுநோயைத் தோற்கடிக்க குடிமக்களாகிய நமது முயற்சி முக்கியமானது" என்றார்.


வருண் சிங்கிற்கு பிரதமர் மோடி புகழாரம்


பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையின் போது கேப்டன் வருண் சிங்கை நினைவுகூர்ந்தார். “குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி இறந்தது என் மனதை பாதித்தது. வருண் சிங் மரணத்தோடு பல நாட்கள் சாகசம் நிறைந்த யுத்தத்தை நிகழ்த்தி நம்மை விட்டு பிரிந்து சென்றார். வருண் சிங்கிற்கு இந்தாண்டில் சவுர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது. வருண் சிங்கிற்கு வருங்கால தலைமுறையினர் மீது பெரும் அக்கறை இருந்தது” என்று கூறினார்.


புத்தகங்கள் படியுங்கள்


மக்கள் வாசிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நமது திரைநேரம் அதிகரித்துவரும் இந்த நேரத்தில், புத்தகங்கள் அறிவை மட்டுமல்ல; அவை ஆளுமை மற்றும் வாழ்க்கையை வடிவமைக்கின்றன. புத்தகங்கள் படிக்கும் பழக்கம் அற்புதமான திருப்திக்கு வழிவகுக்கிறது. 


மேலும், இந்திய கலாசாரத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவும், அதை பரப்பவும் பல்வேறு நாட்டினர் ஆர்வம் காட்டி வருவதாகவும், வரவிருக்கும் புத்தாண்டு நமக்கு புதிய வாய்ப்புகளை அளித்து, புதிய அத்தியாயத்தை எழுதும் என நம்புவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண