நடிகர் சல்மான் கான் பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தனது பிறந்தநாளுக்கு முன்னதாக, சல்மான் கான் தனது பன்வெல் பண்ணை வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு அவரை விஷமற்ற பாம்பு கடித்துள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது.  உடனே, சல்மான் கான் காமோத்தேவில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, இன்று காலை 9 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பாம்பு சல்மான் கானின் கையில் கடித்தது. ஆனால் தற்போது அவர் நன்றாக இருக்கிறார். அவருக்கு விஷ எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டு, சில மணிநேர கண்காணிப்புக்குப் பிறகு  வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். சல்மான் கானை பாம்பு கடித்த தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அது விஷமற்ற பாம்பு என்று தெரியவந்ததை தொடர்ந்து, நார்மல் மோடிற்கு வந்தனர்.


 






சல்மான்கான் தனது பிறந்தநாளை, தனது ஆடம்பரமான பன்வெல் பண்ணை வீட்டில் கொண்டாடுவது வழக்கம். இன்று இரவு சல்மான் ஒரு நெருக்கமான பார்ட்டியை நடத்தலாம் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு லாக்டவுனின் பெரும்பகுதிக்கு பிறகு, சல்மான் கான் தனது சகோதரி அர்பிதா கான் ஷர்மாவின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அவர் பண்ணையில் வேலை செய்வது மற்றும் விதைகளை விதைப்பது போன்ற பல படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலானது. கடந்த ஆண்டு சல்மான் கான் தனது பண்ணை வீட்டில் ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் ஒரு பாடலை படமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


 






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண