Serials TRP |பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளிய கயல் ! ரோஷினியின் முடிவுக்கு தொடர்பா? இதுதான் காரணமா?

பல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு  விருந்தாக அமைந்த ரோஜா சீரியல் தற்போது 10.26 என்ற புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது

Continues below advertisement

என்னதான் திரையரங்குகள் வளர்ச்சி, ஓடிடி வளர்ச்சி என ரசிகர்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரியாக மாறினாலும் சீரியல்களுக்கான மவுசு குறையவே இல்லை. ஆரம்ப நாட்களில் சீரியல்கள் குடும்ப தலைவிகள் மத்தியில் என்ன ரோல் பிளே செய்ததோ அதில் எந்த மாற்றமும் இல்லாமல் அடுத்தடுத்த தலைமுறைகளும் சீரியல்கள் மீது ஆர்வம் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். சன் டி , ஜீ தமிழ், விஜய் டிவி என மூன்று தொலைக்காட்சி சேனல்களும் தற்போது சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணி நிறுவனங்களாக இருந்து வருகின்றன.

Continues below advertisement

அந்த வகையில் தற்போது இந்த மூன்று சேனல்களில் டீ.ஆர்.பி விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த வாரம் 11.12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த சன்டிவியின் கயல் சீரியல் இந்த வாரம்  11.21 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. அடுத்ததாக விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய மூன்று சீரியல்களும் 11.4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன.


கடந்த வாரம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த வானத்தைப் போல  மற்றும் சுந்தரி சீரியல்கள், விஜய் டிவி சீரியல்களின் ஆதிக்கத்தால் தற்போது மூன்றாம் ( 10.75 என்ற ரேட்டிங் மதிப்பில் வானத்தை போல ) மற்றும் நான்காம் இடத்தை (10.43 என்ற ரேட்டிங் மதிப்பில் சுந்தரி ) பிடித்துள்ளன. பல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு  விருந்தாக அமைந்த ரோஜா சீரியல் தற்போது 10.26 என்ற புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக நம்பர் 1 ரேட்டிங்கில் இருந்த கண்ணம்மா சீரியல் தற்போது தொடர் சரிவை கண்டுள்ளது . இதற்கு காரணம் சீரியலில் செய்யப்பட்ட கதாநாயகி மாற்றம் உள்ளிட்டவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. 

zee tamil சீரியல்களுக்கான வரவேற்பு வழக்கம்போல குறைந்திருப்பதை காட்டுகிறது இந்த வார முடிவுகள்

Continues below advertisement