தேனிலவு:
மும்பையைச் சேர்ந்தவர் முகமது காஷிப் இம்தியாஸ் சாயிக். 23 வயதான இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியுள்ளது. இதையடுத்து, முகமது காஷிப் தனது மனைவியுடன் தேனிலவு கொண்டாடுவதற்கு மகாராஷ்ட்ராவில் தேனிலவு செல்வதற்கு புகழ்பெற்ற இடமான மாதேரனுக்கு சென்றுள்ளார். இவர்களுடன் மற்றுமொரு தம்பதியும் தேனிலவிற்கு சென்றுள்ளனர்.
தேனிலவிற்கு சென்ற தம்பதிகள் மாதேரனில் பல இடங்களையும் சுற்றிப்பார்த்த நிலையில், முகமது காஷ்யப், அவரது மனைவி மற்றும் இவர்களுடன் சென்ற மற்ற தம்பதிகள் இருவரும் குதிரை சவாரி செல்ல ஆசைப்பட்டுள்ளனர். இதற்காக நான்கு பேரும் ஆளுக்கொரு குதிரையில் ஏறி அமர்ந்துள்ளனர். அனைவரும் குதிரையில் சவாரி செய்துள்ளனர்.
புதுமாப்பிள்ளை உயிரிழப்பு:
அப்போது, முகமது காஷ்யம் சென்ற குதிரை மட்டும் மிகவும் வேகமாக ஓடியுள்ளது. இதில் நிலை தடுமாறிய முகமது காஷ்யப் பின்னோக்கி கீழே விழுந்துள்ளார். அவர் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காஷ்யப்பின் மனைவி மற்றும் அவர்களது நண்பர்கள் இருவரும் அதிர்ச்சியடைந்து ஓடிவந்தனர்.
அவர்கள் உடனே ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, அருகில் இருந்த மாதேரன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரது காயம் தீவிரமாக இருந்ததால் அவரை உல்ஷாநகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கேட்ட அவரது மனைவி வேதனையில் கதறி அழுதது மருத்துவமனையில் இருந்த அனைவரையும் சோகமடைய வைத்தது.
தொடரும் விபரீதம்:
தேனிலவுக்கு சென்ற இடத்தில் குதிரையில் இருந்து தவறி விழுந்த புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலாவிற்கு வருபவர்கள் குதிரை சவாரி செய்யும்போது தலைக்கவசம் அணியாததும் இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைகிறது என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
புகழ்பெற்ற மாதேரன் சுற்றுலா தளத்தில் மொத்தம் 460 குதிரைகளும், 94 ரிக்ஷாக்களும் உள்ளது. அங்கு இதுபோன்று குதிரையில் இருந்து தவறிவிழுந்து உயிரிழப்பது இது முதல்முறையல்ல. கடந்த 2010ம் ஆண்டு பாலிவுட் நடிகர் மணீஷ் ஆச்சார்யா இதேபோன்று குதிரையில் இருந்து தவறிவிழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார். 2015ம் ஆண்டு 7 வயதே ஆன சிறுமி இதபோன்று குதிரையில் இருந்து கீழேவிழுந்து அடிபட்டு, குதிரை தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தது.
2016ம் ஆண்டு 32 வயதான நீலம்சிங் என்பவர் இதேபோன்று கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதனால், இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Adani Reply Hindenburg: பக்கம் பக்கமாக குற்றச்சாட்டை வைத்த ஹிண்டன்பர்க் அறிக்கை: அசால்ட்டாக பதில் அளித்த அதானி குழுமம்!
மேலும் படிக்க: Naba Kishore Das Profile: தொகுதியில் செல்வாக்கு...பணக்கார அரசியல்வாதி... சுடப்பட்டு மரணம் அடைந்த அமைச்சர்! யார் இந்த நபா தாஸ்!