புதுவையில் ஜி20 மாநாடு கூட்டம் இன்று தொடங்குகிறது. இதில் 75 வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டம் இன்றும் நாளையும் இரு நாட்களுக்கு நடக்கிறது. ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்தியா முழுவதும் 200 நகரங்களில், பல்வேறு தலைப்புகளில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதன்படி புதுச்சேரியில் இன்று ஜி20 பிரதிநிதிகள் மாநாடு துவங்குகிறது.


புதுச்சேரி மரப்பாலம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று காலை 9.30 மணிக்கு, ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக அறிவியல் 20 மாநாடு நடைபெறுகிறது. வெளிநாட்டுப் பிரதிநிதிகள் புதுவையை அடுத்த நாளை ஆரோவில்லுக்கு செல்கின்றனர். அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர். வெளிநாட்டுப் பிரதிநிதிகள் புதுச்சேரிக்கு விமானங்களில் வந்தனர். ஸ்வீடன், ஐரோப்பிய நாடுகளில் இருந்து புதுவைக்கு வந்துள்ள வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கூறுகையில், முதல்முறையாக புதுவைக்கு வருகிறோம். பருவநிலை மாற்றம் தொடர்பாக விவாதிக்க உள்ளோம். இதில் முக்கிய முடிவுகள் பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தனர்.


மேலும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்கும் விடுதிகள், விமான நிலையம், மாநாட்டு அரங்கம் ஆகியவை அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்கள் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் விடுதியின் முன் பகுதியில் புதுவையின் அடையாளமான ஆயி கட்டிடவடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் ஆயி மண்டபம், பிரதமர் மோடி உருவ மணல் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், புதுச்சேரி நகரம் பொலிவுபடுத்தப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.


ஜி20 அறிவியல் 20 தொடக்கக் கூட்டத்துக்கான இந்தியாவின் தலைவர் டாக்டர் அசுதோஷ் ஷர்மா கூறுகையில், அறிவியல்- 20 கூட்டத்தில் இந்தியாவில் உள்ள 42 அறிவியல் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.இதில் உலகளாவிய சுகாதாரம், பசுமையான எதிர்காலத்துக்குத் தேவையான தூய ஆற்றலைப் பெறுதல், அறிவியலை சமூகம் மற்றும் கலாச்சாரத்துடன் இணைத்தல் குறித்து விவாதிக்கப்படும். விஞ்ஞானத்தின் மூலம் கிடைக்கும் தீர்வுகளை செயல்படுத்த ஒத்துழைக்க உதவும் ஒரு தளத்தை ஜி-20 வழங்குகிறது என கூறினார். புதுச்சேரியைத் தொடர்ந்து, அகர்தலா (சிக்கிம்), பங்காரம் தீவு (லட்சத்தீவு), போபால் (மத்திய பிரதேசம்) ஆகிய இடங்களில் அறிவியல்-20 கூட்டம் நடைபெறுகிறது. இறுதிக் கூட்டம் கோவையில் (தமிழ்நாடு) நடைபெறுகிறது. அறிவியல்-20 கூட்டத்தில் இந்தியாவில் உள்ள 42 அறிவியல் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மேலும் தற்போது புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட எல்லையான ஆரோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.