உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் அதானி. கடந்த வாரம் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால் இந்திய பங்குச்சந்தையில் அதானி நிறுவனம் மிக மோசமான சரிவைச் சந்தித்தது. மேலும், அதானியின் சொத்துக்களும் ஆயிரக்கணக்கான கோடிகள் குறைந்தது.


குற்றச்சாட்டுகள் தவறு


இந்த நிலையில், ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது. அதானி குழுமம் அளித்துள்ள விளக்கத்தில், "ஹிண்டன்பர்க் ஆய்வு மூலம் அளித்துள்ள 400 பக்க குற்றச்சாட்டுகள் தவறானது மற்றும் ஆதாரமற்றது. ஹிண்டன்பர்க்கின் மறைமுக நோக்கங்கள் மற்றும் நடைமுறைக்கு எதிராக அதானி குழுமம் பதில் கேள்வி எழுப்புகிறது. ஹிண்டன்பர்க் இந்திய நீதித்துறை மற்றும் ஒழுங்கு முறை கட்டமைப்பை புறக்கணித்துள்ளது.




அதானி குழுமம் நிர்வாக தரநிலைகள், சான்றுகள், கடன் தகுதி, சிறந்த நடைமுறைகள், வெளிப்படையான நடத்தை, நிதி மற்றும் செயல்பாட்டு  செயல்திறன் சிறப்புகளை கொண்டுள்ளது. மேலும், ஹிண்டன்பர்க் அறிக்கை வட்டி மற்றும் பத்திரங்களில் தவறான சந்தையை உருவாக்குவதற்காகவும், தவறாக பதிவு செய்து ஆதாயம் தேட வேண்டும் என்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்திய சட்டத்தின் கீழ் பத்திர மோசடியை தெளிவாக உருவாக்குகிறது.


ஆதாரமற்றவை:


ஹிண்டன்பர்க் அறிக்கையில் எழுப்பிய 88 கேள்விகளில் 68 கேள்விகளுக்கு அதானி குழும நிறுவனங்களால் ஏற்கனவே வெளியிடப்பட்ட அந்தந்த ஆண்டு அறிக்கைகள், குறிப்புகள், நிதி அறிக்கைககள் மற்றும் பங்குகளை வழங்குதலில் உள்ளது. 20 கேள்விகளில் 16 கேள்விகள் பொது பங்குதாரர்கள் மற்றும் அவர்களின் நிதி ஆதாரங்கள் பற்றியவை. மீதமுள்ள நான்கு வெறுமனே குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.




ஹிண்டன்பர்க் இந்த கேள்விகளை உருவாக்கியதன் நோக்கம் பார்வையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கவனத்தை திசை திருப்புவதற்கே ஆகும். 2 வருட விசாரணை மற்றும் ஆதாரங்களை கொண்டு உருவாக்கப்பட்டதாக ஹிண்டன்பர்க் கூறியுள்ளது. ஆனால், இதில் முழுமையடையாத சான்றைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஹிண்டன்பர்க் அறிக்கையானது முதலீட்டாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது. இதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.


அதானி குழுமம் மீதான தாக்குதல்:


அதானி குழுமம் அதன் பங்குதாரர்களுக்கு ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக எங்களுடன் நிற்கும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறது. ஹிண்டன்பர்க் அறிக்கை திரிக்கப்பட்ட சான்றுகள் ஆகும். இந்திய முதலீட்டாளர்களின் வளர்ச்சியை தவறாக வழிநடத்துகிறார்கள். இது அதானி குழுமத்தின் பங்குதாரர்களின் நம்பிக்கையின் மீது அதன் வளர்ச்சிக்கான உறுதிபாட்டை குறைவாக மதிப்பிடுவதற்கான ஒரு தாக்குதல்”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஹிண்டன்பர்க் இந்த ஆய்வை வெளியிடுவதற்கு முன்பு இதுதொடர்பான சரிபார்த்தலுக்கு தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்றும், அவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதானி குழுமம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.  


அதானி குழுமம் அனைத்து சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு முழுமையாக இயங்குகிறது என்பதை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். அனைத்து அதிகாரிகளுக்கும் முன்பாக எங்கள் பங்குதாரர்களை பாதுகாக்க அனைத்தையும் முன்பதிவு செய்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.