ஆப்ரேஷன் அஜய் திட்டம் மூலம் 143 இந்தியர்கள் இஸ்ரேலில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். 


கடந்த 7 ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் காசாவில் வான்வழி தாக்குதல் தொடங்கியது. ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். பார்க்கும் திசை எல்லாம் மனித உடல்கள்.


இதற்கு மத்தியில் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் இடையேயான மோதல், 17வது நாளாக நீடித்து வருகிறது. போர் தொடங்கியதை தொடர்ந்து காஸாவில் உள்ள மக்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதும் கேள்விக்குறியானது. இதையடுத்து 15 நாட்களுக்குப் பிறகு, இரண்டு தினங்களுக்கு முன்னதாக எகிப்தின் ராபா எல்லை வழியாக  காஸாவிற்குள் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அதேபோல் அமெரிக்காவில் இருந்தும் மக்களுக்கு தேவையான முதலுதவி வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எக்ஸ் தளத்தில், “காஸாவில் உள்ள குடிமக்கள் தொடர்ந்து உணவு, தண்ணீர், மருத்துவம் மற்றும் பிற உதவிகளைப் பெறுவதை உறுதி செய்வதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.


இது ஒருபுறம் இருக்க அங்கு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இஸ்ரேலில் சுமார் 85,000 இந்திய வம்சாவளி யூதர்கள் உள்ளனர். இஸ்ரேலில் சிக்கித்தவித்து வரும் இந்தியர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. இதற்காக ஆப்ரேஷன் அஜய் என்ற திட்டத்தை இந்தியா அறிமுகம் செய்தது. சிறப்பு தனி விமானம் மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் மூலம் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து இந்தியர்களை அங்கிருந்து மீட்டு வருகின்றனர்.






அந்த வகையில் ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரில் இருந்து இந்தியர்களை அழைத்துக் கொண்டு 6 வது விமானம் நேற்று டெல்லிக்கு புறப்பட்டது. இந்த விமானம் இன்று காலை டெல்லிக்கு வந்தடைந்தது. அதில் 2 நேபாள குடிமக்கள் உடன் 143 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்.  


ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவை இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களால் தாக்கி வரும் நிலையில், முதல் கட்டமாக, வெளியுறவு அமைச்சகம் நேற்று 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை அமைத்தது. கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு விவரங்கள்: 1800118797 (கட்டணமில்லா), +91-11 23012113, +91-11-23014104, +91-11-23017905, +91996829 , மற்றும் situationroom@mea.gov.in.  என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்திய  தூதரகம் இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்குhttps://indembassyisrael.gov.in/whats?id=dwjwb என்ற இணைப்பில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Israel - Hamas War: 266 பேர் பலி- ஹமாஸ் படைக்கு அமெரிக்கா எச்சரிக்கை? உலக தலைவர்கள் இஸ்ரேல் வருகை


Para Asian Games 2023: F51 கிளப் எறிதல் போட்டி.. இந்திய வீரர் பிரணவ் சூர்மா தங்கம் வென்று அசத்தல்..!