தமிழ்நாடு:



  • தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  • ஆயுதபூஜையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்; பூ, பழங்கள் விலை கடும் உயர்வு

  • தரையில் ஊர்வதை விட்டு தலையை தூக்கி பாருங்கள் தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது - எடப்பாடி பழனிசாமி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

  • கலைஞர் மகளிஎ உரிமை தொகை திட்ட பயளானர்களின் விவரங்கள் மாதம்தோறும் ஆய்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  • காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்பும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

  • 5 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு - மீண்டும் அட்டூழியத்தில் இலங்கை கடற்படை

  • வங்கக்கடல் காற்றழுத்தம் 25ம் தேதி கரையை கடக்கும்; தென் தமிழகத்தில் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

  • சென்னையில் இன்று (அக்டோபர் 23 ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.


இந்தியா: 



  • டெல்லி அருகே பயங்கர விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

  • இஸ்ரேலில் இருந்து 143 பயணிகளுடன் 6வது சிறப்பு விமானம் டெல்லி வந்தது.

  • பேப்பர் கப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

  • கர்நாடக அணையில் இருந்து தமிழகத்தில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

  • போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு மருத்துவ, நிவாரண உதவிகளை அனுப்பியது இந்தியா. 

  • தெலங்கானவில் பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 


உலகம்: 



  • பிலிப்பைன்ஸ் ராணுவ கப்பல்கள் மீது சீனா தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • இந்திய எல்லை அருகே படை குவிப்பிலும், பாலம் அமைப்பதிலும் சீனா தீவிரம் - அமெரிக்க ராணுவ தலைமையகம் அறிக்கை.

  • தென்கொரியாவில் கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு.

  • நேபாளத்தில் நேற்று நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு. 

  • காசாவில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு முதலுதவி வழங்க அமெரிக்க மற்றும் உலக நாடுகள் தரப்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.


விளையாட்டு: 



  • உலகக் கோப்பை 2023: நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

  • உலகக் கோப்பை 2023: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

  • உலகக் கோப்பை கிரிக்கெட் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி.

  • உலகக் கோப்பை 2023ல் அதிக ரன் குவித்தவர் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி

  • ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர் - பஞ்சாப் எப்.சி. ஆட்டம் டிரா

  • ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்து சுப்மன் கில் புதிய சாதனை படைத்தார். 

  • ஆசிய ஜூனியர் பேட்மிண்டனில் இந்திய வீரர் போர்னில் ஆகாஷ் சாங்மாய் தங்கப்பதக்கம் வென்றார்.