F51 கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் பிரணவ் சூர்மா தங்கம் வென்று அசத்தியுள்ளார். பாரா ஆசிய விளையாட்டில் F51 கிளப் எறிதல் போட்டியில் 3 பதக்கங்களையும் கைப்பற்றியது இந்தியா.
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 மற்றும் ஆடவர் கிளப் த்ரோ எஃப் 51 ஆகிய இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தி, ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பதக்கங்களை வென்றது.
சைலேஷ் குமார் மற்றும் பிரணவ் சூர்மா ஆண்கள் உயரம் தாண்டுதல் டி63 மற்றும் ஆண்கள் கிளப் எப் 51 ல் முறையே தங்கம் வென்றனர். சைலேஷ் குமார் 1.82 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கதையும், மாரியப்பன் தங்கவேலு 1.80 மீட்டர் தாண்டி வெள்ளியையும், கோவிந்த்பாய் ராம்சிங்பாய் பதியார் 1.78 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இதில், சுவாரஸ்யமாக, ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி63 போட்டியில் இந்த மூன்று இந்திய விளையாட்டு வீரர்கள் மட்டுமே போட்டியாளர்களாக இருந்தனர்.
ஆடவர் கிளப் எஃப் 51 போட்டியில் பிரணவ் சூர்மா 30.01 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். இவரை தொடர்ந்து தரம்பிட் 28. 76 மீட்டரும், அமித் குமார் 26.93 மீட்டரும் எறிந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தனர். இந்த போட்டியில் நான்கு விளையாட்டு வீரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சவுதி அரேபியாவின் ராதி அலி அல்ஹர்தி 23.77 மீட்டர் தூரம் எறிந்து கடைசி இடத்தை பிடித்தார்.
தொடர்ந்து, மோனு கங்காஸ் ஆடவருக்கான ஹாட் எட் எஃப் 11 போட்டியில் 12.33 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்கப் பட்டியலில் இடம் பிடித்தார்.
பெண்களுக்கான கேனோ விஎல்2 போட்டியில் பிராச்சி யாதவ் 1;03.147 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு பாராட்டு
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளின் உயரம் தாண்டும் ஆட்டத்தில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக அவருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனிவரும் ஆட்டங்களில் மேலும் சாதிக்கவும் வாழ்த்துகிறேன்.
இதே உயரம் தாண்டும் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய வீரர் சைலேஷ் குமார், வெண்கலம் வென்ற இந்திய வீரர் இராம்சிங் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.