உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதி கொல்லப்பட்ட வழக்கில், திருட்டு குற்றங்களிலும் மூளையாகச் செயல்பட்ட 12 வயதுச் சிறுவன் மற்றும் அவனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை காஸியாபாத் காவல் துறை தெரிவித்துள்ளது.  இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது:


குப்பை சேகரிக்கும் வியாபாரி:


’’காஸியாபாத்தைச் சேர்ந்த இப்ராஹிம் குப்பைகளைச் சேகரித்து விற்கும் தொழில் செய்து வந்தார். 60 வயதான இவருக்கு, தொழிலில் நல்ல லாபம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இவரின் மனைவி ஹஸ்ரா. இதுகுறித்து அறிந்த 12 வயது மைனர் சிறுவன், தம்பதி இருவரிடமும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த தம்பதியினருக்கு சொத்துகள் இருப்பதைத் தெரிந்துகொண்டு அவர்களுக்கு உதவுவதுபோல நடித்துள்ளான். 


பிறகு நவம்பர் 22ம் தேதி அந்த 12 வயது சிறுவன் மஞ்சேஷ், சிவம் மற்றும் சந்தீப் ஆகிய 3 நபர்களுடன் இணைந்து அவர்கள் வீட்டுக்குச் சென்றுள்ளான். அங்கு சென்று தங்கம் உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையடித்துள்ளான். அப்போது இவர்களை கண்டு அதிர்ச்சியடைந்த இப்ராஹிம் மற்றும் ஹஸ்ரா அவர்களை தடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது, அவர்கள் இருவரையும் இவர்கள் கொலை செய்துவிட்டுத் தப்பி உள்ளனர். க்ஷ


12 வயது சிறுவன்:


போலீஸ் வந்து பார்த்தபோது வீட்டுக்குள் இப்ராஹிம் இறந்த நிலையில் கிடந்தார். அவரின் மனைவி ஹஸ்ரா அருகில் இருந்த காலி நிலத்துக்குப் பக்கத்தில் உள்ள கழிப்பறை அருகே இறந்து கிடந்தார். கழுத்தைச் சுற்றிலும் துணியை இறுக்கிக் கொலையாளிகள் கொலை செய்தது தெரிய வந்தது. 


அதைத் தொடர்ந்து காவல் துறை தனது விசாரணையை முடுக்கியது. இதில், குற்ற சம்பவத்துக்குக் காரணமாக இருந்த 12 வயது மாஸ்டர் மைண்ட் சிறுவனும் உடந்தையாக இருந்த மூவர் குறித்தும் தெரிய வந்தது. இதையடுத்து மைனர் சிறுவனும் மஞ்சேஷ், சிவம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சந்தீப் தப்பி ஓடிவிட்டார். போலீஸார் குற்றவாளிகளிடம் இருந்து 12 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர். ஒரு மொபைல் போன், தங்க செயின் ஆகியவையும் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன’’.


இவ்வாறு உ.பி. காவல் துறை தெரிவித்துள்ளது. 


அண்மையில் மகாராஷ்டிராவில் மர்ம நபர்கள் சிலர் கத்தியால், பெட்ரோல் நிலைய ஊழியர்களை தாக்கி பணம் பறித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 


Also Read: ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் இரண்டு லட்சம் தருவதாக வெள்ளை காகிதங்களை கொடுத்து மோசடி செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Also Read: ஆருத்ரா 2500 கோடி..! முக்கிய குற்றவாளிகளை சுற்றி வளைக்கும் போலீஸ்..! பணம் திரும்ப கிடைக்குமா..!?.........