கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் இரண்டு லட்சம் தருவதாக வெள்ளை காகிதங்களை கொடுத்து மோசடி  செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருவேங்கடசாமி. இவர் மோட்டார் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வேலை பார்க்கும் கம்பெனிக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மோட்டார் சரி செய்ய வந்துள்ளார். அப்போது கேரளாவை சேர்ந்த மணிகண்டன் எனது முதலாளி கார்த்தி என்பவர் கருப்பு பணம் நிறையாக வைத்துள்ளார். ஆகையால் நீங்கள் ஒரு லட்சம் கொடுத்தால் இரண்டு லட்சம் தருவதாக கூறியுள்ளார். இந்த சமயத்தில் திருவேங்கட சாமிக்கு பணம் இல்லையே எனக் கூறி வந்துள்ளார்


இதனை அடுத்து மணிகண்டன் மெக்கானிக் திருவேங்கட சாமிக்கு தினமும் கால் பண்ணி பணம் ரெடி ஆகி விட்டதா வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு பணம் கிடைக்காது சீக்கிரம் வாருங்கள் என்று கூறியுள்ளார். இதனை நம்பி திருவேங்கட சாமிக்கு தெரிந்த பைனான்சியர் கணேஷ் என்பவரிடம் நடந்த விஷயத்தை கூறியுள்ளார். இதனை எடுத்து கணேஷ் நான் ஒரு லட்சம் உங்களிடம் தருகிறேன் நீங்கள் பணத்தை வாங்கி வாருங்கள் நீங்கள் 50,000 எடுத்து விட்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் எனக்கு கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு கால் செய்து பணம் ரெடியாக உள்ளது எங்கு வந்து வாங்கிக் கொள்ளலாம் என்று மெக்கானிக் திருவேங்கடசாமி கேட்டுள்ளார்.


இதனை அடுத்து ஆனைமலை அருகே உள்ள அம்பராம்பாளையத்திற்கு வாருங்கள் உங்களுக்கு பணம் கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். பணம் கிடைக்கும் ஆசையில் திருவேங்கடசாமி அம்பராம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்துள்ளார். அங்கு காத்திருந்த கேரள மாநிலம் கோழிக்கோடு சேர்ந்த கார்த்தி மற்றும் மணிகண்டன் ஆகியோர் ஒரு லட்சத்தை வாங்கி விட்டு இதில் நான்கு 500 ரூபாய் கட்டுகளில் இரண்டு லட்சம் இருக்கிறது வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் கேரளா நோக்கி சென்று விட்டனர். அவர்கள் சென்றவுடன் பணம் கிடைத்த ஆசையில் பணத்தின் கட்டுகளை எண்ணிப் பார்க்க பிரித்துப் பார்த்துள்ளார். 


அப்போது முன்பக்கம் 500 ரூபாய் நோட்டுகள் போல இருந்த காகிதத்தின், பின்பக்கம் வெள்ளை காகிதமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஆனைமலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் சரவணம்பட்டியை சேர்ந்த மெக்கானிக் திருவேங்கட சாமியை ஆனைமலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளை பேப்பர்களை கொடுத்து ஏமாற்றிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


ஏற்படுத்தி உள்ளது.