தமிழகத்தில் இம்மாதத்துடன் பனிக்காலம் முடிவடைந்து விடும். தற்போது, காலை வேளையில் 7.30 மணி வரை பனிப்பொழிவு நீடிக்கிறது. மாலை வேளையிலும் 5.40 மணிக்கே பனிப்பொழிவு துவங்கி விடுகிறது. இந்நிலையில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
”இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
வரும் 11 மற்றும் 12ஆம் தேதிகளில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பிப்ரவரி 15ஆம் தேதி, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை”.
இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Breaking News LIVE: பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலை!
Lal Salaam: அதிர்ச்சி.. லீக்கான லால் சலாம் படம்.. சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பரபரப்பு