கோவை மதுக்கரை அறிவொளி நகர் பகுதியில் உள்ள தங்க நகை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோவை புதூர் தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடோன் முழுவதும் தீ பரவியதால் தீயை கடுபடுத்துவது தீயணைப்புத் துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. குடோனில் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேறி விட்டதாகவும், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும், விபத்தின்போது சமையல் சிலிண்டர் பயன்பாட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கோவை அறிவொளி நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை பரவியது. 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே அறிவொளி நகர் பகுதியில் ரசீது என்பவருக்கு சொந்தமான நகைபெட்டி தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகின்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பிற்பகல் நகைபெட்டி தயாரிக்கும் ஆலையின் குடோனில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து குடோன் மற்றும் ஆலையில் இருந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு 4 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடோனில் ஏற்பட்ட தீ காரணமாக கரும்புகை வெளியேறி வருகின்றது. அப்பகுதியே புகை மூட்டமாக காட்சி அளிக்கின்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது. இந்த தீ விபத்து குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க