வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இருந்த வாக்களர்களின் எண்ணிக்கையை விட 6 சதவீதம் அதிகம் என தெரிவித்துள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள்49.7 கோடி பேரும் பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேரும் தகுதி பெற்றவர்களாகவும் 48,044 பேர் மூன்றாம் பாலித்தனவர்கள் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் புதிய வாக்காளர்களில் 1.41 கோடி பேர் பெண்கள் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


அதேபோல் மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்சம் பேரும் வாக்களிக்க தயாராக உள்ளனர். அதேபோல் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 2.63 கோடி பேர் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 17 வயது நிரம்பியவுடனேயே வாக்காளர்களாக பதிவு செய்தவர்கள் மட்டும் 10.64 லட்சம் பேர் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


அதேபோல் இதற்கு முன்னர் இருந்த வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு கோடியே 65 லட்சத்து 76 ஆயிரத்து 654 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அதில் 67 லட்சத்து 82 ஆயிரத்து 642 வாக்காளர்கள் இறந்துவிட்டதால் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதேபோல் 75 லட்சத்து 11 ஆயிரத்து 128 வாக்காளர்கள் தாங்கள் ஏற்கனவே வழங்கிய முகவரியில் இருந்து வெளியேறியவர்கள் என்ற அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், 22 லட்சத்து 5 ஆயிரத்து 685 வாக்காளர்கள் டூப்ளிகேட் வாக்காளர்கள் அதாவது ஒருவரது பெயர் வாக்காளர் பட்டியலில் தவறுதலாக மீண்டும் ஒருமுறை இடம் பெற்றுள்ளது, இப்படி இடம் பெற்ற வாக்காளர்களின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது. 


வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள இந்தியாவின் மிகப் பெரிய தேர்தலான மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் ஆகும்.