சென்னையில் பிரபல சுற்றுலா தளமாக இருப்பது மெரினா கடற்கரை. பெரியர்வர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் வரும் இடமாக இருக்கும் மெரினா கடற்கரை கொரோனா பரவல் காரணமாக அடைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த நிலையில், மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்த நிலையில் நேற்று மெரினா கடல் உள்வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவலின் படி சுமார் 5 அடி கடல் உள்வாங்கியதாகவும், உள்வாங்கிய கடல் அரை மணி நேரத்தில் மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்பி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அண்மையில் இந்தோனேசியாவின் தெற்கு பகுதியில் உள்ள மவுமேரா தீவு அருகே பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. சென்னையில் டிசம்பர் மாதம் என்றாலே ஏதாவது அசாம்பாவிதம் நடக்குமோ என்ற பீதி சென்னை மக்களிடம் நிலவும் நிலையில், கடல் உள்வாங்கிய நிகழ்வு சற்று ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக, தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று அதனைத் தொடர்ந்து பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் பரவிய ஒமிக்ரான் நமது அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கும் பரவியது.
இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாகவே தமிழக அரசு ஒமிக்ரான் தொற்றை தமிழகத்தில் தடுக்கும் பொருட்டு, மெரினா கடற்கரையில் புத்தாண்டைக் கொண்டாட தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்