விழுப்புரம்: முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் இலஞ்ச ஒழிப்பு துறை சோதனை; உப்புத் தின்றவர் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் மரக்காணம் சமூக வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் பேட்டி.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு நிகழ்ச்சி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 200 கர்ப்பிணிப் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளைகாப்பு நடத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் கலந்து கொண்டார்.




அப்போது பேசிய அமைச்சர் மஸ்தான், தமிழக அரசு பெண்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. கர்ப்பிணிகள் தங்களையும், கருவில் வளரும் குழந்தையையும் ஆரோக்கியத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டும். இதற்காக தமிழக அரசு மகப்பேறு நிதியுதவி, முழுமையான மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கர்ப்பிணிகள் முறையாக தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.


முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: 69 இடங்களில் தொடரும் ரெய்டு!


பின்பு செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது:-


முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை திட்டத்தினை துவக்கி வைத்தார். அந்த திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக தமிழக முதல்வர் தற்போது தமிழகம் முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கு  வளைகாப்பு நிகழ்ச்சியை அரசு விழாவாக ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார். இன்று விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மைலம், திண்டிவனம் உள்ளிட்ட தொகுதிகளில் 1400 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கான உதவித் தொகையினை விரைந்து வழங்கிட மாவட்ட ஆட்சியர்க்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் உத்தரவிட்டார்.


Jio | அதிக டவுன்லோட் வேகம்கொண்ட நெட்வொர்க் `ஜியோ’... ட்ராய் அறிவிப்பு.. அடுத்தடுத்த இடங்களில் யார்?


அமைச்சர் தங்கமணி வீட்டில் வருமான வரி துறை சோதனை தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு: உப்பு திண்றவர் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும், தவறு செய்தால் நிச்சயம் அதற்கான தண்டணையை அனுபவித்து தான் ஆகவேண்டும், அது தங்கமணி ஆக இருந்தால் என்ன வேலுமணி ஆக இருந்தால் என்ன. மேலும் பேரூராட்சி, நகராட்சி தேர்தலை எப்போது அறிவித்தாலும் அதனை எதிர்கொண்டு 100% வெற்றி வாய்ப்பினை உள்ளாட்சி தேர்தல் போல் பெறுவோம் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண