கஞ்சா போதையில் போக்குவரத்துக் காவலரைத் தாக்கிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


இரண்டாம் நிலை போக்குவரத்துக் காவலர்


காஞ்சிபுரத்தில் போக்குவரத்து காவல்துறை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் சேகர். இவர், நேற்று முன் தினம் (ஆக.04) மாலை காஞ்சிபுரத்தில் இருந்து பொன்னேரிக்கரை வழியாக சென்னை செல்லும் செங்கழுநீரோடை வீதி, ஜவகர்லால் சாலை சந்திப்பு அருகே போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.


போக்குவரத்து காவலரான சேகர் காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள செங்கழு நீரோடை வீதி சந்திப்பில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.


கற்கள் உருட்டுக்கட்டையால் தாக்குதல்


அப்போது, சாலையில் சென்று கொண்டிருந்தோரை அச்சுறுத்தும் வகையில் சாலை விதிகளுக்கு முரணாகவும் தவறான வழியிலும் வேகமாக வந்த ஆட்டோவை தலைமைக் காவலர் சேகர் தடுத்து நிறுத்தியுள்ளார்.


இதனால், ஆட்டோவில் இருந்து கஞ்சா போதையுடன் இறங்கிய இரண்டு இளைஞர்கள் போக்குவரத்து தலைமைக் காவலரிடம், வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாதம் முற்றி ஆத்திரத்தில் கையில் இருந்த கற்கள் மற்றும் உருட்டுக்கட்டைகளால் தலைமைக் காவலர் சேகரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் போக்குவரத்து தலைமைக் காவலரை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


சிவகாஞ்சி காவலர்கள் தொடர்ந்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு அந்தப் பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போக்குவரத்து காவலர் சேகரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய இளைஞர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.





சிசி டிவி காட்சிகள் மூலம் கண்டுபிடிப்பு


இந்த நிலையில், முன்னதாக காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் பகுதியில் பதுங்கி இருந்த முகமது சாதிக் (28) மற்றும் தீபக் (23) இருவரையும் கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர். போக்குவரத்து நட மாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கஞ்சா போதையில் போக்குவரத்துக் காவலரையே இளைஞர்கள் தாக்கிய சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க: Nancy Pelosi Visits: சீறிப்பாய்ந்த சீனாவின் 20 ராணுவ விமானங்கள்! கட்டுப்பாட்டில் தைவானின் வான்பாதுகாப்பு மண்டலம்? உச்சக்கட்ட பரபரப்பு!


Friendship Day 2022 Wishes: உலகப்போரால் உருவான நண்பர்கள் தினம்! தோள் கொடுக்கும் தோழமைக்காக ஒருநாள்! வரலாறு இதுதான்!


இலங்கையின் ஆட்சி கவிழ்ப்பு முன்னரே தெரியும்; கோத்தபயவுக்கு இந்தியா விசா மறுத்தது உண்மை - பரபரப்பை கிளப்பும் கீர்த்தி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண