சென்னையில், சென்ற 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 11 வயது சிறுமி கடைக்குச் சென்றபோது, 64 வயது நிரம்பிய முருகன் என்பவர் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


இதுகுறித்து சிறுமியின் தாய் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்னதாக புகார் அளித்திருந்தார்.


இதனையடுத்து காவல் துறையினர் முருகன் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டங்களின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். 


இந்த வழக்கு முன்னதாக சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது பாதிக்கப்பட்ட சிறுமி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். தொடர்ந்து வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி முருகனுக்கு போக்சோ சட்டப்பிரிவில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், இந்திய தண்டனை சட்டப் பிரிவில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


இந்த சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


போக்சோ சட்டம் : 


16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்.


18 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக இந்த போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் குறித்த தகவல்கள் பின்வருமாறு:



  • Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்

  • Aggravated penetrative sexual assault - தீவிரமான பாலியல் தாக்குதல்

  • Sexual Assault - பாலியல் தொல்லை

  • Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை

  • Sexual Harassment - பாலியல் தொந்தரவு

  • Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்


இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.



  • 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை

  • இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை

  • 12 வயதுக்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)




மேலும் படிக்க: The Royal Family Reunion: குடும்ப சர்ச்சைகளுக்கு நடுவே சர்ப்ரைஸ்...எலிசபெத்துக்கு ஒன்றாக அஞ்சலி செலுத்த வந்த வில்லியம்-கேட், ஹாரி-மேகன் தம்பதி!


Pitbull: தொடரும் ’பிட்புல்’ இன நாய்களின் கொடூர தாக்குதல்... ஆபத்தான நாய் இனங்களுக்கு தடை விதிக்க பீட்டா அழுத்தம்...