வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 9-ந் தேதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வரும் 9-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.




இது அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற்று, வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த கன மழை மற்றும் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் பல்வேறு அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கைகளும் அணை திறப்புகளும் நடந்து வருகிறது.




இன்னிலையில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி உள்ளது. இந்த ஏரி கரையின் நீளம் 12,960 அடிகள், மற்றும் இது 2908 ஏக்கர்கள் பரப்பளவு கொண்டது. நீர் 2231.48 ஏக்கர்கள் பரவியும் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் இது பெரிய ஏரியாகவும் விளங்குகிறது. இதன் முழு கொள்ளளவான 23.3 அடி கொண்டது தற்போது 22.4 அடியை எட்டி உள்ளதால் ஏரிக்கு  நீர்வரத்தும் அதிகரித்துள்ள நிலையில் இன்றோ ,நாளையோ அணை திறக்கப்படும் என தண்டோரா மூலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.




 இதனால் ஏரியின் கரையோரங்களில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டும் போது தானியங்கி கதவுகள் தானாகவே திறந்து கொண்டு உபரிநீர் வெளியேறும் எனவும் இந்த சூழலில் மதுராந்தகம் ஏரியின் கரையோரம் வசிக்கும் 23 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து வெளியேறும் நீரானது அதன் கிளை ஏரிகளில் தேக்கப்படுவதால் பெரும் அளவில் பாதிப்பு இருக்காது எனவும் தற்போது வினாடிக்கு 250 கன அடி வீதம் நீர் வரத்து வருவதால் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண