வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்க்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் சில நேரங்களில் அதி கனமழையும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




சென்னையை பொறுத்தவரை தொடர்கனமழையால் காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,திருவண்ணாமலையில் 247 ஏரிகள் 100% நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் கனமழை காரணமாக, திருவண்ணாமலை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள 129 ஏரிகளும், செங்கல்பட்டில் உள்ள 75 ஏரிகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 43 ஏரிகளும்அதன் முழு கொள்ளவை எட்டி நிரம்பியுள்ளன.அதேபோன்று சென்னையில் உள்ள ஏரிகள் அனைத்தும் முழுகொள்ளவை ஏடியுள்ளது. ஆகையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




ஏரிகள் கொள்ளளவு விபரம்..


காஞ்சிபுரம் மாவட்டம் - 129 ஏரிகள் 100 சதவிகிதமும், 84 ஏரிகள் 75 சதவிகிதமும், 61 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன


செங்கல்பட்டு மாவட்டம் - 75 ஏரிகள் 100 சதவிகிதமும், 672 ஏரிகள் 75 சதவிகிதமும்,116 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன.


திருவண்ணாமலை மாவட்டம - 43 ஏரிகள் 100 சதவிகிதமும், 11 ஏரிகள் 75 சதவிகிதமும்,22 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன.


திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 247 ஏரிகள் 100 சதவிகிதமும், 175 ஏரிகள் 75 சதவிகிதமும், 211 ஏரிகள் 50 சதவிகிதமும் மீதமுள்ள 236 ஏரிகள் 25சதவிகிதத்துக்கும் குறைவாக நிரம்பியுள்ளன. இந்த மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 1022 ஆகும்.


சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் கிட்டத்தட்ட முழு அளவை எட்டும் நிலை உள்ளது. புழல் ஏரியில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


புழல் ஏரியின் மொத்த நீர் மட்டம்: 21.20 அடி. இதில் தற்போது 19.30 அடியாக தண்ணீர் உயர்ந்துள்ளது. தற்போது விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதேபோன்று செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கனாடிஉபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஏரி கரையோரப் பகுதியில் வசிக்கும்  மக்கள் மேடான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெறிவித்துள்ளனர்.