வேலூர் மாவட்ட தலைமை இடமாக வைத்து செய்யப்பட்டு வந்த நிதி நிறுவனம் நடத்தி வந்த IFS (இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ்) என்ற நிதி நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8000 ரூபாய் வட்டி தரப்படும் என்று பல பேரிடம் பணம் பெற்று மோசடி செய்தது தொடர்பாக காஞ்சிபுரம் பொருளாதர குற்றப்பிரிவு போலீசார் மூன்று இடங்களில் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகாமையில் உள்ள மின்மினி சரவணன் என்பவர் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஐந்து பேர் கொண்ட குழு காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் என இந்நிறுவனத்தின் உள்ள 21 கிளை அதிகாரிகளின் உரிமையாளர்கள் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆருத்ராவை மோசடி தொடர்ந்து மீண்டும் ஒரு நிதி நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு சோதனை செய்து வருவதால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.
21 இடங்களில் சோதனை..
இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் IFS என்ற கம்பெனி தொடர்பாக தமிழகம் முழுவதும் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் 8000 மாதம் தருவதாக கூறி பல பேரிடம் முதலீடு பெற்று மோசடி செய்தது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேரிடம் பணத்தை வசூல் செய்துள்ளது.இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் வேத நாராயணன் சகோதரர்கள் ஆவர். சோதனை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Nancy Pelosi Visits: சீறிப்பாய்ந்த சீனாவின் 20 ராணுவ விமானங்கள்! கட்டுப்பாட்டில் தைவானின் வான்பாதுகாப்பு மண்டலம்? உச்சக்கட்ட பரபரப்பு!
இலங்கையின் ஆட்சி கவிழ்ப்பு முன்னரே தெரியும்; கோத்தபயவுக்கு இந்தியா விசா மறுத்தது உண்மை - பரபரப்பை கிளப்பும் கீர்த்தி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்