சென்னையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, 47 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடைபெற்று வரும் முக்கிய பிரமுகர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் சீனர்களுக்கு விசா வாங்கித் தந்த முறைகேடு வழக்குத் தொடர்பாக இந்த அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


கார்த்தி சிதம்பரம் சீனர்களுக்கு விசா வாங்கித் தந்ததில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பான வழக்கு தொடர்பாக இந்த அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றாலும் அவருக்கு சொந்தமான இடங்களிலோ, அவரது அலுவலகங்களிலோ சோதனை நடைபெறவில்லை.


தமிழ்நாட்டில் கடந்த நான்கு நாட்களாக திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தசூழலில், அமலாக்கத்துறையினர் சென்னையில் ரமேஷ் டக்கர் என்ற பைனான்சியர் மற்றும் பல்வேறு முக்கிய நிறுவனங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க : தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு: தமிழை தேர்ந்தெடுத்தவர்களுக்கு தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வினாத்தாள்..


பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் இந்த சோதனையில் இதுவரை ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தவகல் வெளியாகியுள்ளது மேலும், வருமானவரித்துறையினரால் சோதனை நடத்தப்பட்ட படத்தயாரிப்பாளர்களான தாணு, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், எஸ்,ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா ஆகியோரது அலுவலகங்களிலும் விரைவில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சென்னையில் 6 இடங்களில் தொடங்கிய சோதனையை பின்னர் பல்வேறு இடங்களில் நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த ஓரிரு தினங்களாக அமலாக்கத்துறை சோதனை, வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருவது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க : கரூர்: காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் - பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்படும் கரையோர மக்கள்..!


மேலும் படிக்க : Rain Update : இனிமே மழை இப்படி இருக்குமா? வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண