தமிழ்நாட்டில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது குறித்து சென்னை மேயர் ப்ரியா ராஜனிடம் கேட்கப்பட்டபோது, ‘அது என் டிபார்ட்மென்ட் இல்லை.’ என்று பதிலளித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் தக்காளி விலை கிலோ ஒன்றிற்கு ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனையாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் .சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலா அனுப்பி வைத்த சென்னை மேயர் ப்ரியா ராஜன், ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய மேயர் பிரியாவிடம் தக்காளி விலை உயர்வு தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,” இது என் டிபாட்மெண்ட் இல்லை.”என பதிலளித்தார். மாநகராட்சி விவகாரங்கள், பூங்கா, சாலை மேம்பாடு தொடர்பானவற்றை என்னிடம் கேட்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மாமன்னன் திரைப்படம் நல்லாயிருக்கு
செய்தியாளர்கள் மாமன்னன் திரைப்படம் எப்படி உள்ளது என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “ மாமன்னன் நல்ல படம்; நல்லா எடுத்து இருக்காங்க. இப்போ திராவிட மாடல் அரசு சமூக நீதியை, கொள்கையை எந்த அளவுக்கு கடைப்பிடிக்கிறார்கள் என்பதை அந்த படத்தில் உதய் அண்ணா காண்பித்துள்ளார். இவ்வளவு பெண்கள் இன்று ஆளுமையில் இருக்கிறார்கள் என்றால் திராவிட மாடல் சமூக நீதி தானே?” என்றார். சொந்த கட்சியிலேயே சாதிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளது என்பதை காட்டும் வகையில் அந்த படத்தில் காட்சிகள் உள்ளது என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ”சொந்த கட்சியில் அப்படி எதுவும் இல்லை. இதுவரை நான் அப்படி எதையுமே சந்தித்தது இல்லை”. இவ்வாறு ப்ரியா தெரிவித்தார்.
ப்ரியா ராஜன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் இவருடைய பதிலுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளின் விலை உயர்வு குறித்து ப்ரியா பதில் சரியானதில்லை என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாமன்னன் திரைப்படம் குறித்து கருத்து தெரிவிக்கும் மேயர், தக்காளி விலை உயர்வு குறித்து’ அது என் டிபார்ட்மெண்ட் இல்ல’ என்று பதிலளித்தது சரியா என்று கேள்வியெழுப்பி வருகின்றனர். மேயராக இருந்துகொண்டு அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படி பதில் சொல்வது முறையா என்றும் பலரும் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் வாசிக்க.
ODI World Cup: உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறுகிறதா பாகிஸ்தான்? குழு அமைத்து ஆலோசனை
”ஆதிபுருஷ் மூலம் காயப்படுத்தி விட்டேன்” - மன்னிப்பு கேட்ட வசனகர்த்தா