ஆதிபுருஷ் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை எழுயதற்கான பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு கொள்வதாக அப்படத்திற்கு வசனம் எழுதிய மனோஜ் முண்டாஷீர் கூறியுள்ளார்.
ராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படத்தில் பிரபாஸ், சயிப் அலிகான், கீர்த்தி சனோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரூ.500 கோடி செலவில் 3டி தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட ஆதிபுருஷ், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. எனினும் படத்தின் கிராபிக் காட்சிகள் மோசமாக இருந்ததாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றிருந்ததால், எதிர்ப்புகள் கிளம்பின.
ஆதிபுருஷ் படத்து மனோஜ் முண்டாஷீர் எழுதிய வசனங்கள் பேச்சு வழக்கில் இருப்பதாகவும், சீதையை இந்தியாவின் மகள் என குறிப்பிடப்பட்டதற்கும் எதிர்மறை விமர்சனங்கள் வைக்கப்பட்டன. நேபாளத்திலும் ஆதிபுருஷ்க்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், அந்நாட்டு அரசு கண்டனத்தையும் பதிவு செய்தது. இதற்கு இடையே, சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றதற்கு விளக்கம் அளித்த வசனகர்த்தா மனோஜ் முண்டாஷீர், அனுமன் கடவுள் இல்லை, அவர் ஒரு பக்தர் என்றார். இதனால், அவருக்கு மேலும் எதிர்ப்புகள் வலுத்ததால் போலீஸ் பாதுகாப்பு போடும் அளவுக்கு பிரச்சனையானது.
இந்த நிலையில், ஆதிபுருஷ் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றிருப்பதற்கு மனோஜ் முண்டாஷீர் மன்னிப்பு கேட்டுள்ளார். படத்தில் உள்ள வசனங்கள் மக்களை உணர்வுப்பூர்வமாக காயப்படுத்தி இருப்பதாக கூறிய மனோஜ் முண்டாஷீர், அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு கொள்வதாக தெரிவித்துள்ளார்.
ஜூன் 16ம் தேதி ஆதிபுருஷ் வெளியாகி இருந்தாலும், பாக்ஸ் ஆபிசில் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என கூறப்படுகிறது. படத்துக்கு கிளம்பிய எதிர்ப்புகளே அதன் வசூலை குறைத்துள்ளதாக கருத்துகள் கூறப்படுகின்றன. ராமனாக நடித்த பிரபாஸிடம் ஆங்காங்கே பாகுபலியின் சாயல் காணப்பட்டஹாகவும், அவரது உடல் அமைப்பும் ராமன் காதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் இல்லை ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இலங்கை மன்னனான நடித்த சைஃப் அலிகானிற்கு நடையும், ஆடை அலங்காரங்களும் ராவணன் கதாபத்திரத்திற்கு பொருந்தவில்லை என விமர்சிக்கப்பட்டுள்ளார். கிராபிக் காட்சிகளும் ராமாயண கதைக்கு ஏற்றார்போல் இல்லை என ஆதிபுருஷ் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.