தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் சார்பில் அக்கறையுள்ள ’ஆழ்ந்து ஆராய்ந்த நுகர்வை’ முன்னெடுக்கும் வகையில் என்விரோ -ஸ்லாவர் ஹேக்காதான் (Enviro - Solver Hackathon) போட்டி நடத்தப்படவுள்ளது.


இந்த ’ ஹேக்கத்தான்’ போட்டி குறித்து செய்தி மக்கள் தொடர்புதுறை வெளியிட்டுள்ள அறிக்கையில், " சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை அதாவது மிசன் லைஃப் (Mission Life) என்பது மத்திய அரசின் புதிய முன்முயற்சியாக உள்ளது. இதன் நோக்கம் சுற்றுச்சூழலை பாதுகாப்பாதாகும். ‘அக்கறையற்ற அழிவுகரமான நுகர்வுக்கு’ பதிலாக ‘அக்கறையுள்ள ஆழ்ந்து ஆராய்ந்த நுகர்வை’ முன்னெடுக்கும் இயக்கமாகும். 


இயற்கை வளத்தினை சேதப்படுத்தாமல், இயற்கையோடு இயைந்து, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க தனிநபர்களையும், சமூகங்களையும் ஊக்குவிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். தண்ணீர் சேமித்தல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உணவு முறைகளை ஏற்றுக்கொள்ளுதல்,  கழிவுகளை குறைத்தல், ஆரோக்கியமான வாழ்க்கை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மின்-கழிவு குறைத்தல் போன்றவைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள்/ ஆலோசனைகள் வழங்குவோர் அங்கீகரிக்கப்படுவார்கள்.


மிஷன் லைஃப்பின் முக்கிய கருப்பொருள்கள்:


ஆற்றல் உபயோகத்தைக் குறைந்தல், நிலையான முறைகளை மிஷன் லைஃப் கருப்பொருள்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 


தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் - முன்னெடுப்பு:


தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் வரும் மே  மாதம் 27 ஆம் தேதி  ( 27.05.2023) முதல் 31-ஆம் தேதி (31.05.2023) வரை ஹேக்கத்தான் போட்டி நடைபெற உள்ளது.


’தண்ணீர் சேமித்தல்’ மற்றும் "ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைத்தல்" ஆகிய இரண்டு கருப்பொருள்களில் ஒரு வாரம்  ஹேக்கத்தான் நடத்தப்பட உள்ளது. இதில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புது தொழில்ச்முனைவோர்கள் ஆகியவர்கள் கலந்து கொண்டு பல்வேறு சுற்றுசூழல் சம்பந்தப்பட்ட சவாலான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் மற்றும் புதுமையான யோசனைகளை வழங்கலாம்.


பரிசுத் தொகை:


இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிற்கும் 5 பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசாக ரூ. 3 லட்சம், 2-வது பரிசு ரூ. 2 -லட்சம் மற்றும் 3 வது பரிசு 3 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ஜூன் 5, 2023 உலக சுற்றுச்சூழல் தினத்தன்று வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தண்ணீர் பற்றாக்குறை மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் அகற்றல் தொடர்பான பிரச்சனைகளுக்கு செயல்படுத்தக்கூடிய மற்றும் அளவிடக்கூடிய தீர்வுகளை இந்த ஹேக்கத்தான் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் புது தொழில் முனைவோர்கள் தங்கள் யோசனைகளை அரசு மற்றும் தொழில்துறையில் உள்ள தலைசிறந்த நிபுணர்களிடம் முன்வைக்கவும், அவர்களின் யோசனைகளை வணிகமயமாக்கவும் ஹேக்கத்தான் ஒரு தளத்தையும், வாய்ப்பையும் வழங்கும்.


ஹேக்கத்தான் பற்றிய விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளமான www.tnpch.gpv.h- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். ஹேப்பி ஹேக்கத்தான்..




மேலும் வாசிக்க.


TNPSC Group 1 Result: குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது.. விவரம்..


Rayudu On Gavaskar: சிஎஸ்கே வீரருக்கும் கவாஸ்கருக்கும் மோதல்.. ஐபிஎல் இம்பேக்ட் பிளேயர் விதியால் வெடித்த பிரச்னை


Car loan Information:

Calculate Car Loan EMI