TNPSC Group 1 Result: குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது.. விவரம்..

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஏப்ரல் மாதத்தில் குரூப் 1 முதல் நிலைத் தேர்வு உள்ளிட்ட 9 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, TNPSC குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

Continues below advertisement

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) மூலம் பல்வேறு அரசுத் துறைகளுக்கான பணிகளில் உள்ள காலியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்கான தேர்வு அட்டவணையையும் தேர்வு முடிவுகள் வெளியாகும் உத்தேச அட்டவணையையும் டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. 

அந்த வகையில், 17 வகையான தேர்வுகளின் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற அட்டவணை ஏப்ரல் 18ஆம் தேதி வெளியானது.

குரூப் 1 தேர்வு 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு நடைபெற்றது. 92 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வை 1,90,957 பேர் எழுதியிருந்தனர். 

5 மாதங்களை கடந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகாமல் இருந்ததால் தேர்வு எழுதியவர்கள் கவலையடைந்தனர். இந்நிலையில் தற்போது, குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

10 பணியிடங்களுக்கான குரூப் 6 தேர்வு (தமிழ்நாடு வனத்துறை துணை வனப் பயிற்சியாளர் பணி) டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாக உள்ளன. 

டிசம்பரில் குரூப் 2 தேர்வு முடிவுகள்:

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடந்த  குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்று தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன.

இதில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களில்  55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் இவர்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளன.

தமிழ்நாடு செயலக சேவை குரூப் V - A பணிக்கான தேர்வு (உதவி பகுதி அலுவலர்) டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாக உள்ளன. 

பிற தேர்வுகள்

77 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப் VII- Bக்கான தேர்வு (நிர்வாக அதிகாரி) அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி இதற்கான தேர்வுகள் நடைபெற்றன. அதே ஆண்டு நவம்பரில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2023 ஏப்ரலில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. 

அதேபோல் குரூப் -8 (நிர்வாக அதிகாரி) தேர்வுகளுக்கான அறிவிப்பு மே மாதம் 20 ஆம் தேதி வெளியாகி, செப்டம்பர் 11 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது.  அதே ஆண்டு நவம்பரில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2023 ஏப்ரலில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

Continues below advertisement