சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் சிறுவன் பார்வையிழப்பு: போதை இளைஞர்கள் கைது!

அங்கு டாக்டர்கள் சிறுவனை பரிசோதனை செய்தனர். பரிசோதனையில்,  பட்டாசு சிதறலால் பாதிப்பு அதிகமாக இருந்ததால் சிறுவனின் கண்பார்வை பறிபோனதாக கூறினர்.

Continues below advertisement

சென்னையில் சவ ஊர்வலத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசால் சிறுவனின் கண் பார்வை பறிபோனது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த அழகுசுந்தரத்தின் மகன் சந்தோஷ். 13 வயதுடைய சந்தோஷ் அருகில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த வாரம் வீட்டின் அருகே உள்ள கடையில் பொருட்கள் வாங்குவதற்கு சென்றபோது, அந்த வழியாக சவ ஊர்வலம் ஒன்று வந்துள்ளது. அந்த ஊர்வலகத்தில் கலந்துக்கொண்ட இளைஞர்கள் சிலர் மது போதையில் இருந்துள்ளனர். அத்துடன்  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் டான்ஸ் ஆடிக்கொண்டு பட்டாசும் வெடித்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, பட்டாசு சிதறல் ஒன்று சிறுவனின் கண்களில் பட்டுள்ளது. இதனால், சிறுவன் வலியில் அலறி துடித்துக்கொண்டிருந்தை பார்த்த அருகில் இருந்தவர்கள், உடனே சிறுவனை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.Dark Circle Remedies | கண்களை சுத்தி சுரப்பா, கருவளையமா? ஊட்டச்சத்து நிபுணர்கள் கொடுக்கும் டிப்ஸ் இவைதான்

அங்கு டாக்டர்கள் சிறுவனை பரிசோதனை செய்தனர். பரிசோதனையில்,  பட்டாசு சிதறலால் பாதிப்பு அதிகமாக இருந்ததால் சிறுவனின் கண்பார்வை பறிபோனதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைக்கேட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு அலறி துடித்தனர். அவர்களை துடித்தது அங்கிருப்பவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.


இதுகுறித்து சிறுவன் சந்தோஷின் தந்தை அழகுசுந்தரம் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப்புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை மேற்கொண்டனர். Watch Video | கோயில் யானைக்கு தலை சீவும் பாகன்- வைரல் வீடியோ..!

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (27), குணசேகரன் (34), செல் வகுமார் (25) ஆகியோர் சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டாசு வெடித்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, மூன்று பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். Kaduvetti Guru Son | 5 போலீஸாரால் சூர்யாவை காப்பாற்றிவிட முடியாது - காடுவெட்டி குரு மகன் பகிரங்க மிரட்டல்..

 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola