நீல் படேல் என்ற விமான பயணி தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கும்பலாக நிற்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, “ சர்வதேச முனையத்தில் 5 விமானங்கள் ஒன்றாக தரையிறங்குகின்றன. அனைத்து இடங்களிலும் சமூக விலகல் அறிகுறிகள் உள்ளன. ஆனால், பராமரிப்பதற்கான அறிகுகளே இல்லை. ஏ.சி. வேலை செய்யவில்லை. வைபை வசதிகள், இணையவசதிகள் சர்வதேச பயணிகளுக்கு இல்லை. குடிவரவுகளுக்கு என்று தனி வரிசைகள் இல்லை. ஆயிரம் மக்கள் ஒருவருக்கு ஒருவர் பின்னால் செல்கின்றனர்.









சென்னை விமான நிலையத்தில் மோசமான அனுபவம். மோசமான நிர்வாகம்” என்று பதிவிட்டுள்ளார்.


அவரது பதிவிற்கு பதிலளித்துள்ள சென்னை விமான நிலைய நிர்வாகம், “விரும்பத்தக்காத அனுபவத்திற்கு வருந்துகிறோம். விமானங்கள் குவிந்ததால் வரிசையில் நிற்கிறது. இந்த பிரச்சினை ஏற்கனவே மாநில அரசாங்கத்திடம் எடுத்துச் செல்லப்பட்டதால் வரும் நாட்களில் மேலும் குடிவரவு கவுண்டர்கள் நியமிக்கப்படும். இலவச வைஃபை வசதி விமான நிலையத்தில் வழங்கப்படுகிறது. பயணிகளுக்கு வழிகாட்ட போதுமான காட்சிகள் உள்ளன.










ஏ.சி.யைப் பொறுத்தவரை வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியசில் பராமரிக்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.” இவ்வாறு பதிலளித்துள்ளனர்.






சென்னை விமான நிலையத்தின் இந்த பதிலை டேக் செய்து தி.மு.க. எம்.எல்.ஏ., டி.ஆர்.பி. ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “ குடிவரவு கவுண்டர்கள் குறித்து தமிழ்நாடு அரசிடம் நீங்கள் கேட்டது என்பதை தெளிவுபடுத்த முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரது கேள்விக்கு இன்னும் விமான நிலைய நிர்வாகம் பதிலளிக்கவில்லை. இதனால், தங்களது விளக்கத்திற்காக காத்திருக்கிறேன் என்று மீண்டும் அவர் பதிவிட்டுள்ளார்.