தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.





பொங்கல் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இவ்விழாவில் பேசிய முதலமைச்சர்,


ஜனவரி மாதம் என்றாலே, தமிழ்நாட்டில் கலைத்திருவிழா தான் ஞாபகத்தில் வரும், திமுக ஆட்சியானது தமிழர்களுக்கான ஆட்சி, பழம்பெருமையை மறந்துவிடக்கூடாது என்பதற்குத்தான் இதுபோன்ற விழா தொடர்ந்து நடத்தப்படுகிறது. 


கொளத்தூர் தொகுதி மட்டுமல்ல தமிழ்நாட்டுல் உள்ள 234 தொகுதிகளும் எனக்கு முக்கியம். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டம் மூலம் 234 தொகுதிகளிலும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன






ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் கோரிக்கை மனுக்கள்  தீர்வு காணப்பட்டது. தமிழ்நாடு நகர்புற வாழ்விட திட்டம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு திறக்கப்பட்டது. அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மூலம் 2591 பேர் பயன்பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.


Also Read: சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகளை ஓடவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது ஆளுநரையும் ஓட விட்டிருக்கிறார் என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Also Read: DMK vs TN Governor: 'பெரியார், அண்ணா பெயரை படிக்காத ஆளுநர் தேவையே இல்லை ' - தி.மு.க. கடும் கண்டனம்..