தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த பல்வேறு கருத்துக்களை வாசிக்காமல் தவிர்த்தது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆளுநரின் செயலைக் கண்டித்து சட்டசபையில் அங்கம் வகித்த தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.




தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோதே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், பா.ஜ.க. ஆளுநருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறது.






இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலைக் கண்டித்து தி.மு.க. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் திராவிட மாடல், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் இந்த வார்த்தைகளை படிக்க மறுக்கும் ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை” என்று பதிவிட்டுள்ளனர்.




முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் ஆளுநர் சொந்தமாக படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்றும், தமிழ்நாடு அரசு தயாரித்து தந்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆளுநர் அவையை விட்டு வெளியேறியபோது அமைச்சர்கள். எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சட்டசபையில் இன்று நடைபெற்ற சம்பவம் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் ஆளுநருக்கு எதிராக கெட்அவுட்ரவி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Raj Bhavan clarifies: தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவ்வாறு நடந்து கொண்டதற்கு என்ன காரணம்?: விளக்கம் அளித்த ஆளுநர் தரப்பு


மேலும் படிக்க: TN Assembly: ஜனவரி 13 ஆம் தேதி வரை சட்டப்பேரவை; ஆளுநர் உரைக்கு உரிமையை உருவாக்கியது அம்பேத்கர்: அப்பாவு ஆவேசம்