Chennai Traffic Diversion: சுதந்திர தினவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு, அன்று ஒரு நாள் மட்டும் கோட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

போக்குவரத்து மாற்றம்:

சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் வார நாட்களில் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு நெரிசால் அதிகமாக இருக்கும். வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை காண முடியும். சாரணமாகவே இப்படி இருக்கும் நிலையில், சுதந்திர தினவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு, அன்று ஒரு நாள் மட்டும் கோட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

எந்தெந்த இடங்கள்?

இதுகுறித்து, சென்னை மாநகர காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சுதந்திர தினவிழா நிகழ்ச்சி 15.08.2023-ஆம் தேதி சென்னை கோட்டையில் நடைபெற உள்ளதால், ஆகஸ்ட் -15 அன்று காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் நேரம் வரை கீழ்க்கண்ட சாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள போக்குவரத்து கீழ்கண்ட வகைகளில் மாற்றியமைக்கப்பட உள்ளது.

1. நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதிவரை அமையப்பெற்றுள்ள இராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்படும்.

2. காமராஜர் சாலையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.

3. பாரிமுனையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) இராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு. முத்துசாமி சாலை, EVR சாலை, பல்லவன் சாலை, அண்ணா சாலை, சென்றடையலாம். வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை

4. அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் வால்ஜா சிக்னல் சந்திப்பு, முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம், NFS சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க 

Independence Day: 1,800 சிறப்பு விருந்தினர்கள்..செல்பி எடுக்க ஸ்பெஷல் ஸ்பாட்..சுதந்திர தினத்திற்காக மத்திய அரசின் மெகா பிளான்

Abdul Kalam Gift: பரிசை கூட வாங்காத அப்துல் கலாம்.. கிரைண்டருக்காக பணத்தை தந்த சம்பவம்.. ஐஏஎஸ் அதிகாரி நெகிழ்ச்சி பதிவு