Chennai Powercut: சென்னையில் இன்றும், நாளையும் எந்தெந்த இடங்களில் பவர்கட்.. லிஸ்ட் இதோ..

Chennai Power cut : சென்னையில் இன்று, நாளை எங்கெல்லாம் மின் தடை என்பது குறித்த விவரம் இதோ!

Continues below advertisement

Chennai Power cut : சென்னையில் இன்று, நாளை எங்கெல்லாம் மின் தடை என்பது குறித்த விவரம் இதோ!

Continues below advertisement

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் இன்று மற்றும் நாளை (நவம்பர் 23, 24) மின் விநியோகம் துண்டிக்கப்படும் இடங்கள் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. மின் சேவை வழங்கும் துறை மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின்சார சேவையைத் துண்டிப்பது வழக்கமாகும்.  அந்த வகையில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் மின்தடை செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.  பராமரிப்புப் பணிகள் முடிந்ததும் மதியம் 02.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய மின்தடை

தாம்பரம்

பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோடு, ராஜேஷ் நகர், துலுகாநாதம்மன் கோயில் தெரு, மணிமேகலை தெரு, ராஜலட்சுமி நகர், கிருஷ்ணா நகர், சாய் பாலாஜி நகர், சிவாஸ் அவென்யூ, ராஜசேகரன் நகர், வெங்கடேஸ்வரா நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை  மின் தடை செய்யப்படவுள்ளது.

காலடிப்பேட்டை

திருச்சின்னக்குப்பம் மெயின் ரோடு, ராஜாக்கடை, அப்பர்சாமி கோயில் தெரு, மேற்கு மாட தெரு, வடக்கு மாட தெரு, சந்நிதி தெரு, மாட்டு மாந்தை, கன்னி கோயில், டி.எச்.ரோடு, சாத்தங்காடு மெயின் ரோடு, புது தெரு, வசந்தா நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை  மின் தடை செய்யப்படவுள்ளது.

நாளைய மின்தடை

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி பஜார், நியூ கும்மிடிப்பூண்டி, பைபாஸ் ரோடு, மா.பொ.சி.நகர், முனுசாமி நகர், எஸ்.ஆர்.கண்டிகை, தம்புரெட்டி பாளையம், ரெட்டம்பேடு, ராஜபாளையம், பெரியநத்தம், மங்காவரம், அப்பாவரம், சோலியம்பாக்கம், அயன் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை  மின் தடை செய்யப்படவுள்ளது.

மேற்கண்ட பகுதியில் இன்றும் நாளையும் மின்தடை செய்யப்படவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.


மேலும் படிக்க

Kamalhassan: திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன்

TN Rain: சென்னையில் திடீர் மழை..! 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! முழு விவரம் உள்ளே..

Actor Vishnu vishal : ’அனைத்து திரைப்படங்களையும் ரெட்ஜெயண்ட் கட்டாயப்படுத்துகிறதா?’ - விஷ்ணு விஷால் சொல்வது என்ன?

Continues below advertisement
Sponsored Links by Taboola