பார்களில் ஆண்கள் சண்டையிட்டுக் கொள்ளும் செய்தியைதான் பொதுவாக அனைவரும் அறிந்திருப்பார்கள். ஆனால், இரண்டு பெண்கள் செம போதையில் ஒருவரை ஒருவரை தாக்கி சண்டைபோட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆமாம், சென்னையில் நட்சத்திர் ஹோட்டலில் மதுபோதையில் இரண்டு பெண்கள் போதையில் சண்டைபோட்டதால் ஹோட்டலே பரபரப்பானது.
தேனாம்பேட்டையில் 35 வயதுடைய சவுமியா என்பவர் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவர், நேற்று கிண்டி கத்திப்பாராவில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகே மற்றொரு பெண் மது அருந்திக்கொண்டிருந்தார். அயனம்பாக்கத்தைச் சேர்ந்த மீரா (வயது 32) என்ற அப்பெண் ஆன்லைன் டிரேடிங் நடத்தி வருகிறார். மது அருந்திக்கொண்டிருந்த அவருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதனை எடுத்துக்கொண்ட பேசிய அவர், நீண்ட நேரமாக சத்தமாக பேசியதாக தெரிகிறது. மிகவும் பொறுமையாக இருந்த சவுமியா, அவரிடம் நாம் நட்சத்திர ஹோட்டலில் இருப்பதாகவும், அதனால் மெதுவாக பேசுங்கள் என்று கூறியுள்ளாராம்.
இதனால், கோபமடைந்த மீரா, சவுமியாவை அசிங்கமாக பேசியதாக கூறப்படுகிறது. கடும் வாக்கவாதத்தில் தொடங்கிய இருவரின் சண்டை கைகலப்பாக மாறி, ஒருவரை ஒருவரை தாறுமாறாக அடித்துக்கொண்டனர். இதனால், அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் இரண்டு பேரையும் எவ்வளவோ சமாதானம் படுத்தியும், அவர்கள் சண்டை தொடர்ந்து கொண்டே இருந்தனர். இது வேலைக்கு ஆகாது என்று, ஹோட்டல் மேனேஜர் போலீசாருக்கு போன் போட்டு அங்கு நடந்த சம்பவம் குறித்து கூறினார். உடனே, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மப்பும் மந்தராமாக இருந்த இரண்டு பெண்களை கைது செய்தனர்.
மீரா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த பரங்கிமலை போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். சவுமியா ஏற்கெனவே குடிபோதையில் தகராறு செய்து போலீசாரிடம் மாட்டிக்கொண்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் அவர் மீதுள்ளது. இதனால், சவுமியாவை தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இரண்டு பெண்களின் சண்டையை தீர்ப்பதற்குள் போலீசாரே சில மணி நேரம் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டனர்.
சுவாரஸ்யமாக செய்திகள்: Watch Video: தேசிய கீதம் இசைத்ததும் இடிந்து அழுத ஆப்கான் கேப்டன்: உடைந்து நின்ற ரசிகர் பட்டாளம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்